People's Watch in Media
...
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜராகி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில், அப்போதைய மாவட்ட ஆட்சியர், 17 காவல் அதிகாரிகள், 3 வரு வாய்த்துறை அதிகாரிகள் என 21 பேருக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக, அப்போது தூத்துக்குடி ஆட்சியராக இருந்த வி. வெங்கடேஷ், தென்மண்டல ஐ.ஜி.யாக இருந்த ஷைலேஷ் குமார் யாதவ் உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எஸ்.பி. கபில் குமார் சரத்கர், துணை வட்டாட்சியராக இருந்த சேகர் உள்ளிட்டோர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர் பாக சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கின் நிலை என்ன? ஒரு காவல் அதிகாரி மீது மட்டும் குற்றப்பத்தி ரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதே, மற்ற போலீசாருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டதா? என்று அடுக்கடுக் கான கேள்விகளை எழுப்பினர். மேலும், தற்போது நடவடிக்கை க்கு உள்ளாகியுள்ள 21 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் என்ன? துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அவர்களின் பங்கு என்ன? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி கள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 11-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
...
...
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் அப்போதைய மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 21 அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.