People's Watch in Media
கல்வியாளர் வசந்தி தேவி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன், மக்கள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த ஹென்றி திபேன், பியுசிஎல்லின் டாக்டர் வி. சுரேஷ், சென்னை சாலிடாரிட்டி குழுவைச் சேர்ந்த நித்யானந்த் ஜெயராமன், அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்ட சிவில் சமூகக் குழுக்கள் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அதில் அமைதியாகப் போராடியவர்களை குண்டர்...
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்த நிலையில், எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பி இருந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (நவ.17) விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அப்போதைய மாவட்ட ஆட்சியர், 17 காவல்துறை அதிகாரிகள், 3 வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 21 பேருக்கு எதிராக நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு விளக்க அறிக்கையை தாக்கல் செய்தது. அப்போது நீதிபதிகள், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 21 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்னென்ன?, துப்பாக்கிச் சூட்டில் இவர்களின் பங்கு என்ன என்பது குறித்து தனித்தனியாக விளக்க அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை டிசம்பர் 11-க்கு தள்ளிவைத்துள்ளனர்.
மதுரையை சோ்ந்த வழக்குரைஞரும், மனித உரிமை ஆா்வலருமான ஹென்றி திபேன் என்பவர் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடா்ந்திருந்தாா். அந்த மனுவில், தான் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தாா். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். பின்னா் இது தொடா்பாக தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை நவ. 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா். அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அப்போதைய மாவட்ட ஆட்சியர், 17 காவல்துறை அதிகாரிகள், 3 வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 21 பேருக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Advocate General R. Shunmugasundaram says explanations had also been sought and received from the then IG, DIG, SP, DSP and a host of others