தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கியூ பிரிவு போலீஸாரின் அத்துமீறலை கண்டித்தும், மக்கள் விரோத உபா சட்டத்தை நீக்க வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமை வகித்தார்
தலைமைக் குழு உறுப்பினர் மு.தமிழ்ப்பித்தன், மாவட்ட தலைவர் மா.மாயாண்டி, மாவட்ட செயலாளர் பி.விடுதலை சேகர், மாவட்ட அமைப்பாளர் ச.கிட்டு ராசா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி திபேன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வாஞ்சிநாதன் உட்பட்ட பல்வேறு அமைப்பினர் பேசினர்.
மதுரையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது.
கியூ பிரிவு போலீஸார் அத்துமீறலை கண்டித்தும், மக்கள் விரோத உபா (UAPA) சட்டத்தை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலர் ராமகிருஷ்ணன் தலைமையில் பல்வேறு அமைப்பைச் சேர்ந்த ஹென்றி திபேன், மீ. தா. பாண்டியன், கனியமுதன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கடந்த 25.11 அன்று தோழர் தமிழ்பித்தன் வீட்டில் கியூ பிரிவு ஆய்வாளர் கணேஷ் பாபு தலைமையில் தமிழ்பித்தன் வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை நடைபெற்றதாகவும், மேலும் புத்தகங்கள் இதழ்கள் துண்டறிக்கைகள் மற்றும் ஆவணங்களை ஜனநாயக விரோதமாக எடுத்து சென்றுள்ளனர்.