தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கடந்த 25.11 அன்று தோழர் தமிழ்பித்தன் வீட்டில் கியூ பிரிவு ஆய்வாளர் கணேஷ் பாபு தலைமையில் தமிழ்பித்தன் வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை நடைபெற்றதாகவும், மேலும் புத்தகங்கள் இதழ்கள் துண்டறிக்கைகள் மற்றும் ஆவணங்களை ஜனநாயக விரோதமாக எடுத்து சென்றுள்ளனர்.
என்றும், மேலும் தமிழ்பித்தன் மகள் அகராதி வீட்டிலும் கியூ பிரிவு போலீசார் சோதனை என்ற பெயரில் சட்டவிரோதமாகவும் அத்துமீறி நடந்துகொண்ட முறை கண்டித்தும், தமிழக அரசு இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த இன்றும் அத்துமீறி நடந்துகொண்ட க்யூ பிரிவு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.