திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞர் உயிரிழந்த விவகாரத்துக்கு மானாமதுரை டி.எஸ்.பி. பொறுப்பேற்க வேண்டுமென மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார். நியூஸ் 18-க்கு பேட்டியளித்த அவர், இதை விட கொடூரமான சித்ரவதை மரணத்தை தான் பார்த்ததில்லை எனக் கூறினார்.