வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, என். மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஹென்றி திபேன் ஆஜராகி, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைத்தது, பலியானவர்களுக்கு தலா 20 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியது என போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அளித்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.