தருமபுரி மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் ஜி.லெனின், சிறீதர் ஆகியோர் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.பி. செந்தில்ராஜா தலைமை வகித்தார். மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குனர் வழக்கறிஞர் ஹென்றிதிபேன், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தேசிய செயற்குழு உறுப்பினர் ஜி.கே. ஸ்டாலின், தோழி கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.சங்கர், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் கோ.வி.சிற்றரசு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் பொ.மு.நந்தன், தேமுதிக மாவட்ட அவைத் தலைவர் குமார், அம்மா பேரவை ஒன்றியச் செயலாளர் முனி. ஆறுமுகம், திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் டி. தவமணி, தொண்டு நிறுவன கூட்டமைப்பின் தலைவர் கமலக்கண்ணன்,
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, பெண்கள் இணைப்பு குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.ரங்கநாயகி, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க மாநில அமைப்புச் செயலாளர் அ.தமிழ்செல்வன், மாவட்டத் தலைவர் வே. விசுவநாதன் ஆகியோர் பேசினர்.