for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

தருமபுரி, மே 14-

தருமபுரி மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் ஜி.லெனின், சிறீதர் ஆகியோர் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.பி. செந்தில்ராஜா தலைமை வகித்தார். மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குனர் வழக்கறிஞர் ஹென்றிதிபேன், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தேசிய செயற்குழு உறுப்பினர் ஜி.கே. ஸ்டாலின், தோழி கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.சங்கர், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் கோ.வி.சிற்றரசு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் பொ.மு.நந்தன், தேமுதிக மாவட்ட அவைத் தலைவர் குமார், அம்மா பேரவை ஒன்றியச் செயலாளர் முனி. ஆறுமுகம், திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் டி. தவமணி, தொண்டு நிறுவன கூட்டமைப்பின் தலைவர் கமலக்கண்ணன்,

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, பெண்கள் இணைப்பு குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.ரங்கநாயகி, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க மாநில அமைப்புச் செயலாளர் அ.தமிழ்செல்வன், மாவட்டத் தலைவர் வே. விசுவநாதன் ஆகியோர் பேசினர். மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் இ.ஆசிர்வாதம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.பின்னர் மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குனர் ஹென்றிதிபேன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், “ இம் மாவட்டத் தில் செய்தியாளர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து காவல்துறை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் கவனத்திற்கு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, காவல்துறை அதிகாரிகள் குடும்பத்திடம் பொய் புகார் பெற்று, நிரபராதிகள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது” என்றார்.ஒரு குறிப்பிட்ட பத்திரிகையாளர் காவல் துறை சார்ந்த ஊழலை காவல்கண்காணிப்பாளரிடம் தெரிவிக்கிறார்.

யார் மீது புகார் கூறுகிறாறோ அந்த காவல் அதிகாரியே அந்த புகார் கூறிய நிருபரை தாக்குகிறார் என்றால் ஒன்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்லது அவருடைய அலுவலகத்துக்கு பொறுப்பாக இருக்ககூடிய ஆய்வாளர் தான் இந்த தகவலை சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு சொல்லிருக்க முடியும். இப்படி இருந்தால் பத்திரிகையாளர்கள் நேர்மையாக பணி செய்ய முடியாத நிலமை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சம்மந்தப்பட்ட பத்திரிகையாளர்களை அழைத்துப்பேசி மன்னிப்புக்கேட்டு, பொய் வழக்குகளை திரும்பப் பெறவேண்டும். இல்லை என்றால் கவனக் குறைவாக இருந்தாகக்கூறி முதல் குற்றவாளியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது தமிழ்நாடு மனித உரியை ஆணையத்திடம் புகார் அளிப்போம் என்றும் கூறினார்.





Join us for our cause