சிறையில் பணியாற்றும் காவலர்களும், போலீஸ் மேலிடத்திலிருந்து வந்த உத்தரவுகள் குறித்து சில உள்விவகாரங்களை சி.பி.ஐ-யிடம் அப்படியே ஒப்பித்துள்ளார்களாம்.
............................
இது குறித்து நம்மிடம் பேசிய மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநரும் வழக்கறிஞருமான ஹென்றி டிபேன், “இந்த வழக்கைப் பொறுத்தவரை சி.சி.டி.வி காட்சிகள் கூடுதல் ஆதாரம்தான். சம்பவத்தின்போது பணியிலிருந்த பெண் தலைமைக் காவலர் ரேவதியின் சாட்சியம்தான் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இருப்பினும் சி.சி.டி.வி காட்சிகள் கிடைத்தால், பென்னிக்ஸும் ஜெயராஜும் போலீஸாரால் எவ்வாறு துன்புறுத்தப்பட்டார்கள், எவ்வளவு நேரம் துன்புறுத்தப்பட்டார்கள், அதில் ஈடுபட்டவர்கள் எத்தனை பேர், ஸ்டேஷனிலிருந்து அவர்களை வெளியே அழைத்துச் சென்றபோது அவர்களின் நிலை என்ன என்பதுவரை இந்த வழக்கு குறித்த அனைத்துக் கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும். அவற்றை இந்த வழக்குக்கான ஆதாரமாக சி.பி.ஐ-யும் நீதிமன்றமும் நிச்சயம் எடுத்துக்கொள்ளும்” என்றார்.