சாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார்? - நேரடி கள ஆய்வு
இ.ஆசீர் பிரிவு: கட்டுரைகள் வெளியிடப்பட்டது: 06 ஜூலை 2020
சம்பவம் 1:
கொரோனா தனிமனித சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரும் இன்றைய நெருக்கடியான காலத்தில் காவல்துறையினரின் பல்வேறு சித்திரவதைகளை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றார்கள். இதன் உச்சகட்டமாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தகப்பன், மகன் என இருவர் சித்திரவதைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டனர்.
கடந்த 18.6.2020 அன்று இரவு சுமார் 8.00 மணியளவில் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைவீதியில் கடைகளை அடைக்கச் சொல்லி காவல் சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் சில காவலர்கள் ரோந்து வந்துள்ளனர். அப்போது "GG பாக்கியம் டிரேடர்ஸ் மரக் கடைக்கு" முன்பாக, கடையில் வேலை செய்து வரும் துரை என்பவரோடு சுமார் ஐந்து நபர்கள் பேசிக் கொண்டு நின்றுள்ளார்கள். அப்போது அவ்விடத்திற்கு வந்த சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கடையை பூட்டிவிட்டு போக வேண்டியது தானே பிறகு ஏன் ரோட்டில் நின்று கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் உடனே அவ்விடத்திலிருந்து மூன்று நபர்கள் சென்றுவிட்டனர்.
...........................