அவர்கள் இந்தக் கொடும்பணியைத் தொடா்ச்சியாக செய்து வந்துள்ளனர். இவ்வாறு கொடூரத் தாக்குதலுக்கு பலியாகி இறந்தோரும், இன்னும் உயிருக்கு போராடுவோரும் உண்டு. ஆனால் இவை பற்றிப் பல முறையீடுகள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலனுக்குச் சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் விளைவுதான் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் படுகொலை. மதுரை: சாத்தான்குளம் வழக்கை சிபிஐக்கு அனுப்பினால் நீதி கிடைக்க கால தாமதம் ஆகும் என்று, காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் தெரிவித்துள்ளது. சிபிசிஐடி விசாரணை தொடர வேண்டும் என அது வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சாத்தான்குளத்தில் 19.06.2020 அன்று நடந்த கொடூரமான காவல் சித்திரவதைகளும், அதனால் பலியான இரண்டு வணிகா்களின் உயிரிழப்பும் நாடெங்கும் மக்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பு ஏற்படச் செய்தன, கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் காவல்துறையினரின் கொடூரமான அத்துமீறல்களையும் சித்திரவதைகளையும் மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்றனா்.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்தேறிய கொடூரமான சித்திரவதைச் சம்பவம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் அனைத்துலக அளவிலும் பேசுபொருளாக மாறியது. உடல் முழுக்கக் காயங்களாலும் ஆசனவாயில் லத்தியைச் செருகியதால் ஏற்பட்ட ரத்தப் போக்காலும் அவதியுற்ற தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் எந்த மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படாமல் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனா்.