சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் தேசிய அளவில் விவாதமாகியிருக்கும் நிலையில், காவல்துறையினரின் அத்துமீறல்கள், அதற்கான காரணங்கள், மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகள், அத்துமீறல்களைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதெல்லாம் குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார் மதுரையிலிருந்து செயல்படும் மனித உரிமை அமைப்பான மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திஃபேன். பேட்டியிலிருந்து.
கே. சாத்தான்குளத்தில் நடந்திருக்கக்கூடிய காவல்துறை அத்துமீறல்கள் எதைக் காட்டுகின்றன?
ப. தமிழ்நாட்டில் குற்றங்களுக்கான தண்டனை மறுப்பு இருக்கிறது. அதாவது impunity இருக்கிறது என்பதைத்தான் இந்தச் சம்பவம் காட்டுகிறது. அதன் உச்சகட்டம்தான் சாத்தான்குளம். 2018ஆம் ஆண்டிலிருந்து, எந்த ஒரு அத்துமீறல் வழக்குகளிலும் தண்டனை கிடைக்கவில்லை. காவல் துறையில் கீழ் நிலையில் உள்ளவர்களை நம்பித்தான் மேலே உள்ள அதிகாரிகள் செயல்படுகிறார்கள் என்ற நம்பிக்கையில், எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தெனாவட்டு கீழ்நிலைக் காவலர்களுக்கு வந்திருக்கிறது. குறிப்பாக, உயர் காவல் அதிகாரிகளின் கவனக் குறைவுதான் இதற்குக் காரணம்.
..............................