for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

16 Nov 2021 Wife of fishermen who died in sea, seeks re-autopsy People's Watch in Media Madurai

Madurai: Alleging that her husband was shot dead by the Sri Lankan navy, the wife of a fisherman from Pudukottai district has moved the Madras high court seeking to perform a re-postmortem on her husband’s body. Justice G...

#media
16 Nov 2021 மீனவர் உடல் மறுபரிசோதனை உயர் நீதிமன்றம் உத்தரவு People's Watch in Media Pudukottai

  மதுரை:புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீனவர் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. கோட்டைப்பட்டினம் பிருந்தா தாக்கல் செய்த மனு: என் கணவர் ராஜ்கிரண் அக்., 18ல் சிலருடன் கடலில் மீன் பிடிக்க சென்றார். படகு மீது இலங்கை கடற்படை மோதி சேதப்படுத்தியது. ராஜ்கிரண் கடலில் மூழ்கி இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. பின் அவரது உடல் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.கணவரை இலங்கை கடற்படை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்; மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு: ராஜ்கிரண் உடலை நவ., 18ல் கோட்டைப்பட்டினம் டி.எஸ்.பி., மணமேல்குடி தாசில்தார் முன்னிலையில், தஞ்சாவூர் அரசு மருத்துவமனை டாக்டர் சரவணன், புதுக்கோட்டை அரசு மருத்துவமனை டாக்டர் தமிழ்மணி மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.மனுதாரர் தரப்பில், ஓய்வு பெற்ற தடயவியல் நிபுணர் சேவியர் செல்வ சுரேஷ் உடன் இருக்கலாம். அரசுத் தரப்பில் வரும் 24ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

#Navy, #Fisherman, #Kottaipattinam, #Pudukottai, #Rajkiran, #MaduraiHighCourtOrder, ##HighCourtOrder, ##HighCourtDirection
16 Nov 2021 புதுக்கோட்டை மீனவர் ராஜ்கிரண் உடலை மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவு! People's Watch in Media Madurai

மதுரை: உயிரிழந்த மீனவர் ராஜ்கிரணின் மனைவி பிருந்தா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகிய மூவரும் அக்டோபர் 19ஆம் தேதி படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி அவர்களது ரோந்து கப்பல் மூலம் மீனவர்களின் படகை இடித்ததில் படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கியது. இதில் சுகந்தன் மற்றும் சேவியரை இலங்கை கடற்படையினர் மீட்டனர். இரண்டு நாட்கள் தேடலுக்குப் பிறகு ராஜ்கிரண் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இதையடுத்து மீனவர் ராஜ்கிரணின் உடலை சர்வதேச எல்லையில் இலங்கை கடற்படை இந்திய கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ராஜ்கிரணின் உடலை எனக்கும், எனது உறவினர்கள் யாருக்கும் முழுவதும் திறந்து காட்டாமல் அடக்கம் செய்து விட்டனர். எனவே, ராஜ்கிரண் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. போட்டோவில் அவர் முகத்தில், உடலில் காயங்கள் இருந்தன. இது குறித்து தமிழ்நாடு காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். ராஜ்கிரண் உடலை மறு உடற்கூராய்வு செய்து எவ்வாறு உயிரிழந்தார் எனக் கண்டறிய வேண்டும். உயர் காவல் அலுவலர் கொண்டு விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கூறியுள்ளார். இந்த வழக்கு இன்று (நவ.16) நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, "நவம்பர் 18ஆம் தேதி தாசில்தார், மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் கோட்டைப்பட்டினத்தில் அடக்கம் செய்யப்பட்ட மீனவர் ராஜ்கிரண் உடலை மீண்டும் எடுத்து மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும். அரசு மருத்துவர்கள் சரவணன், செல்வகுமார் குழுவினர் உடற்கூராய்வு செய்ய வேண்டும். மனுதாரர் தரப்பில் ஓய்வு பெற்ற தடயவியல் அலுவலர் சேவியர் செல்வ சுரேஷ் மறு உடற்கூராய்வின் போது உடனிருப்பார். மீனவர் ராஜ்கிரண் சுட்டுக்கொல்லப்பட்டு இறந்தாரா அல்லது கடலில் மூழ்கி இறந்தாரா என்பதை தெளிவுப்படுத்தும் வகையில் மறு உடற்கூராய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

#media
16 Nov 2021 Over 200 civil society leaders write to CJI urging hearing of pending key constitutional matters in SC People's Watch in Media New Delhi

In an open letter addressed to Chief Justice of India, they urged the Supreme Court to take up hearings into issues like CAA, Abrogation of Article 370, farm laws, continued misuse of UAPA etc Over 200 civil society...

#media


Join us for our cause