Media
முகிலன் வழக்கில் துப்பு கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் என பல்வேறு போராட்டங்களின் முன்னணியில் இருந்து செயல்பட்டவர் சமூக ஆர்வலர் முகிலன். இவர் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஆவணப்படத்தை வெளியிட்டார். அதில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையில் பொதுமக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. போலீஸ் உயர் அதிகாரிகள்தான் வன்முறைக்கு காரணம் என்று ஆதாரத்துடன் விளக்கினார். இந்த ஆதாரங்களை வெளியிடுவதால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் முகிலன் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, மதுரை செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையம் சென்ற முகிலனை அன்று இரவிலிருந்து காணவில்லை. கிட்டத்தட்ட 10 நாட்கள் ஆன நிலையில் அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி பல்வேறு தரப்பினும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி, போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. முகிலன் காணாமல் போனது குறித்து சிபிசிஐடி, போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் மாயமான முகிலனை கண்டுபிடித்து தரக் கோரி ஹென்றி திபேன் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முகிலன் வழக்கில் துப்பு கிடைத்துள்ளதாக சிபிசிஐடி காவல்துறையினர் உயர்நீதிமன்றத்தில் தகவலளித்துள்ளனர். ஆனால் அவரைப்பற்றிய விவரங்களை, அவர் குறித்த தகவல்களை, துப்புகளை வெளியில் சொன்னால் விசாரணை பாதிக்கப்படும் என்பதால் அதை வெளியிடவில்லை எனவும் சிபிசிஐடி தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஹென்றி திபென் தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கை 3 வாரத்திற்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
He went missing on February 15 after a press meet After being apprised of the progress made by the Crime Branch-Criminal Investigation Department (CB-CID) in tracing the whereabouts of environmental activist T. Mugilan alias Shanmugam who went missing...
சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போய் இன்றுடன் 112 நாட்கள் ஆகிறது. முகிலன் காணாமல் போனது பற்றி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு செய்யப்பட்டது. இந்தப் பின்னணியில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தி ஒவ்வொரு முறையும் உயர்நீதிமன்றத்தில் வாய்தா வாங்கியது சிபிசிஐடி போலீசார். இந்த நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. உயர்நீதிமன்றத்தில் முகிலன் தரப்பில் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் ஆஜரானார். அப்போது சிபிசிஐடி போலீசார் ஒரு சீலிட்ட கவரை நீதிபதியிடம் கொடுத்து முகிலன் சம்பந்தமாக முக்கியமான தகவல்கள் இதில் உள்ளது என கூறினார்கள். அந்த விபரங்களை பார்த்த நீதிமன்றம் முகிலன் வழக்கை நான்கு வாரத்திற்கு தள்ளி வைப்பதாக கூறினார்கள். அப்போது முகிலன் தரப்பு வழக்கறிஞர் இரண்டு வாரத்திற்கு மட்டும் தள்ளி வைத்து முகிலனை ஆஜர்படுத்த வேண்டும் என கூறினார்கள். சிபிசிஐடி தரப்பு மேலும் ஒரு வாரம் அவகாசம் கேட்டதால் நீதிமன்றம் மூன்று வாரங்கள் தள்ளி வைத்து இதுதான் ஃபைனல் என கூறியது. அனேகமாக அடுத்த விசாரணையின்போது முகிலன் சம்பந்தமான பிரச்சினைக்கு முழுமையான தீர்வை சிபிசிஐடி ஏற்படுத்தி கொடுக்கும் என தெரிகிறது.
சுற்றுச்சூழலியல் ஆர்வலர் முகிலன், சென்ற வருடம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் 13 பேரை போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தி சுட்டு கொன்றது சம்பந்தமான ஆவன படமொன்றை சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் பிப்ரவரி 15ந் தேதி வெளியிட்டார். அன்று இரவிலிருந்து அவர் காணாமல் போனார். 105 நாட்கள் ஆகியும் முகிலன் இருப்பிடம் பற்றி எந்த முன்னேற்றத்தையும் போலீஸ் கண்டுபிடிக்கவில்லை. இந்த சூழலின் பின்னனியில் தான் ஏற்கனவே முகிலனை மீட்க கோரி பல போராட்டங்கள் நடத்திய காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் இன்று 1 ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அரசுக்கு எதிராக மாபெரும் ஆர்பாட்டம் நடத்தியது. கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தலைமையில் பழ.நெடுமாறன், தி.மு.க. துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமிஜெகதீசன், மார்க்ஸ்சிஸ்ட் கே.பாலகிருஷ்ணன், சி.பி.ஐ. சி.மகேந்திரன், காங்கிரஸ் கோபன்னா, ம.தி.மு.க. மல்லை சத்யா, வி.சி.க. திருமாவளவன், த.வா.க.வேல்முருகன் உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் இந்த ஆர்பாட்டத்தை நடத்தினர். என் கணவர் உயிருடன் இருக்கிறாரா? தமிழக அரசே பதில் சொல் என்ற கேள்வியுடன் முகிலன் மனைவி பூங்கொடியும் இதில் கலந்து கொண்டார்.
சமூக ஆர்வலர் முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தலைமை தாங்கினார். தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்.நல்லக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:- இயற்கை வளங்களுக்காக போராட்டம் நடத்திய முகிலனை காணாமல் போனதாக போலீசாரிடம் தெரிவித்து 105 நாட்கள் ஆகியுள்ளது. இந்தநிலையில் போலீசாரும், அரசும் இதுவரை முகிலனை கண்டுபிடிக்கவில்லை. மேலும் முகிலன் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். முகிலனை கண்டுபிடிக்காவிட்டால் வருகின்ற 15-ந்தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம். மத்திய அரசு இந்தி திணிப்பு முயற்சியை மீண்டும் எடுக்கக் கூடாது. மாநில மொழியிலேயே கல்வியை தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முகிலனின் மனைவி பூங்கொடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க. சட்டத்துறை செயலாளர் ஆர்.கிரிராஜன், ம.தி.மு.க. துணை பொது செயலாளர் மல்லை சத்யா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், தமிழ் பேரரசு கட்சி தலைவர் வ.கவுதமன், நடிகர் பொன் வண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The environment activist had released a report and video on police highhandedness in Thoothukudi firing; CD-CID unable to trace him in spite of forming 17 special teams in Tamil Nadu. Political parties and civil rights organisations staged a...
Ask why the probe agency did not interrogate police officials Rights activists have questioned why the CB-CID did not examine senior police officials, whose alleged complicity in the firing on anti-Sterlite protesters in Thoothukudi was exposed by Mugilan...