“அமுதா ஐஏஎஸ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம்” ஹென்றி டிபேன் பரபரப்பு பேட்டி! - HENRY TIPHAGNE ABOUT BALVEER SINGH
பல்வீர்சிங் ஐபிஎஸ் வழக்கை விசாரித்த பின்னரும் அறிக்கையை இதுவரை வழங்காத அமுதா ஐஏஎஸ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம் என மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன் கூறியுள்ளார்.
மதுரை: விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கி சித்திரவதை செய்த அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர்சிங்கை தமிழக அரசு பாதுகாக்க முயல்கிறதா? என மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று ஹென்றி டிபேன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ திருநெல்வேலி முதன்மை நீதிமன்றம் (JM No:1) முன் நிலுவையில் உள்ள 4 காவல் சித்திரவதை வழக்குகளில் பல்வீர் சிங் ஐபிஎஸ் மற்றும் அவருடைய குழுவில் உள்ள 13 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிக்கைகளில் இடம் பெற்றுள்ளது.
திருப்புவனம் அஜித்குமார் வழக்கில் காவலர்கள் கொலையாளிகளாக உறுதி செய்யப்பட்டதால் உடனடியாக கைது செய்யப்பட்டனர். அரசின் விரைவான நடவடிக்கை மற்றும் உயர் நீதிமன்றத் தலையீடு இவ்வழக்கை விரைவுபடுத்தி தற்போது சிபிஐ விசாரணை நடந்து வருகிறது.
.........................................................................
