திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக கடந்த செப்டம்பர் மாதம் பொறுப்பேற்ற பல்வீர்சிங், இந்த சித்ரவதையை அரங்கேற்றி வந்தி ருக்கிறார். வீரப்பன் தேடுதல் வேட்டையில் கூட இப்ப டிப்பட்ட சித்ரவதை இல்லை என மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி டிபேன் கூறுகிறார். எந்த ஒரு புகார் வந்தாலும், அந்த புகாரின் பேரில் அழைத்து வரப்படும் நபர்களை இப்படித்தான் சித்ரவதை செய்தி ருக்கிறார் பல்வீர் சிங். பற்களை பிடுங்கு வதற்கு முன் அவர் செய்திருக்கும் காரியம் மிகப்பெரும் பயங்கரம். ஒன்றரை இஞ்ச் ஜல்லி கற்களை வாயில் போட்டு கடிக்கச் சொல்வாராம். முடியாது என்று சொன்னாலோ, தயங்கி நின்றாலோ அடித்து, துன்புறுத்தி, கட்டாயப்படுத்தி கடிக்கச் சொல்வாராம். வேறு வழியின்றி, வலியால் துடி துடிக்க விசார ணைக்குச் சென்றவர்கள் கடிப்பார்களாம். ரத்தம் குடம் குடமாய் கொட்டும். பிறகு, கற்களை துப்பச் சொல்லி, பற்களை பிடுங்கி இருக்கிறார். செல்லத்துரை என்ற நபரின் மூன்று பற்களை பிடுங்கிய கொடுமையும் நடந்திருக்கிறது. ஒரு அடிதடி வழக்கில் விசாரணைக்குச் சென்ற இசக்கிமுத்து, செல்லத்துரை, மாரியப்பன் ஆகிய மூன்று சகோதரர்க ளையும் ஒரே அறையில் வைத்துக் கொண்டே, ஒவ்வொருவரது பற்களையும் பிடுங்கி இருக்கிறார். அவரது கால்களில் விழுந்து கெஞ்சிய பிறகும் கொடுமை நடந்திருக்கிறது. இரண்டு சிறுவர்கள் கூட இவரது கொடுமைக்கு தப்பவில்லை.