வீரப்பனின் சகோதரர் மாதையன் உள்ளிட்ட மூவரை விடுதலை செய்யக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கூட்டறிக்கை மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. விடுதலை குறித்து விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை, மனிதநேய மக்கள் உள்ளிட்ட 87 கட்சிகள் மற்றும் மக்கள் சிவில் உரிமைக் கழகம், மக்கள் கண்காணிப்பகம், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம், சோகோ அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய கூட்டறிக்கை :
கோயம்புத்தூத் ர் மத்திய சிறையில் வீரப்பனின் சகோதரர் மாதையன் மற்றும் அவருடன் சேர்ந்ந்து ஆண்டியப்பன், பெருமாள் ஆகியோர் 33 ஆண்டுகளுக்கும் மேலாகத் தண்டனைச் சிறைவாசிகளாக இருந்து வருகின்றனர்.
இதுபோன்ற நீண்ட சிறைவாசம் என்பது சிறைவாசிகளின் நலனுக்கும். அவர்களது குடும்பத்தாரின் நலனுக்கும் மட்டும் எதிரானது அல்ல. சிறைவாசிகளின் மறுவாழ்வு என்ற அரசின் கண்ணோட்டத்துற்கும் முற்றிலும் எதிரானதாக உள்ளது. இந்த சிறைவாசிகளின் முன் விடுதலைக் குறித்து அவர்கள் தண்டனை பெற்ற வழக்கினைக் காரணமாக வைத்து அறிவுரைக் குழுமம் மற்றும் இதர குழுமங்கள் பரிசீலிப்பதில்லை என்பது அதிர்ச்சிகரமாக உள்ளது.
....................................