விசாரணை கைதிகள் பற்களை பிடுங்கிய வழக்கு: பல்வீர் சிங் ஆஜர்
ஏஎஸ்பி பல்வீா் சிங் திருநெல்வேலி மாவட்ட முதலாம் குற்றவியல்
நடுவா் நீதிமன்றத்தில் வெ ள்ளி க்கிழமை ஆஜரானாா் .
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பான வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீா் சிங் திருநெல்வேலி மாவட்ட முதலாம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானாா் .
...............................................................................
பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் மாடசாமி, இந்த வழக்கை மனித உரிமை மீறல் வழக்காக கருதி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். அது தொடா்பாக அளிக்கப்பட்ட மனுவையும் குற்றவியல் நீதித்துறை நடுவா் ஏற்றுக்கொண்டாா் .
