for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

லாக்-அப் மரணம்: "அஜித்குமார் குடும்பத்திடம் ரூ.50 லட்சம் பேரமா?" - அரசுக்கு ஜகோர்ட்டு சரமாரி கேள்வி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (வயது 28). தங்க நகை திருட்டு வழக்கு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

..................................................................

தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், "சம்பவம் நடந்த அன்று அஜித்குமாரை திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. அப்படி என்றால் அங்கிருந்தே விசாரணை தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவரது உடல் மதுரை கொண்டு வரப்பட்டது சந்தேகத்தை எழுப்புகிறது. அவரது தாயாரும், சகோதரரும் 28-ம் இரவு 12 மணி வரை தனது மகன் குறித்து விசாரித்துள்ளனர். திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்த எஸ்.பி., அஜித்தின் அம்மாவிடம், உங்கள் மகன் இறந்து விட்டார் என கூறியுள்ளார் என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹென்றி திபேன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், நகை காணாமல் போனது தொடர்பாக எப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டது?" என்று கேள்வி எழுப்பினர்.

...........................................

Full Media Report



Join us for our cause