சென்னை: டெல்லி உயர் நீதிமன்றம் தடையை நீக்கியுள்ள நிலையில், சமூகப் பணியாற்றி வரும் மக்கள் கண்காணிப்பகத்தை முடக்குவதற்காக சிபிஐ அமைப்பின் மூலம் மிரட்டல் விடுப்பதா என்று மத்திய அரசுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர் என்றான் பாரதி. ஆனால், உலகின் பல்வேறு திசைகளில் இருந்து இந்தியாவுக்கு, தமிழகத்திற்கு வந்த கிறித்துவப் பெருமக்கள், அடித்தட்டு ஏழை எளிய மக்களின் உடல் நலன் காக்க, அன்னைத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள் நினைக்குந்தோறும் நெஞ்சு நெகிழச் செய்பவை.