முதலாளித்துவ சனநாயக நாட்டில் அரசதிகாரத்தின் மீறல்களைச் சுட்டிக் காட்டித் தட்டிக் கேட்போர் மீது பழிவாங்கல் நடவடிக்கை பாய்வதென்பது புதிதல்ல. வாடிக்கையான ஒன்றே! இந்த வரிசையில் இப்போது மக்கள் கண்காணிப்பகம் மீது ஒன்றிய அரசதிகாரம் பாய்ந்துள்ளது. மனித உரிமைத் தளத்தில் கால் நூற்றாண்டுக்கு மேலாக இந்திய அரசமைப்பினுடைய சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டு களப்பணியாற்றி வரும் மக்கள் கண்காணிப்பகம் அலுவலகத்தில் கடந்த 8.1.2022 அன்று மத்திய புலனாய்வுத் துறையினர்(CBI) எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நடுநிலையுடன் செயற்படவேண்டிய ஊடகங்கள் ஒருதலைப் பட்சமாய் முதல் தகவல் அறிக்கையில் உள்ளபடி சேதி வெளியிட்டன. இது மக்கள் கண்காணிப்பகத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக உள்ளது. எனவே உண்மையை உலகறிய உரக்கச் சொல்ல வேண்டியது காலத்தின் அவசியம்.
.................................