for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

'பல்' பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் நேரில் ஆஜர்... நீதிமன்றம் முக்கிய உத்தரவு! - CUSTODIAL TORTURE CASE

சம்பவம் தொடர்பாக விசாரித்த காவல் அதிகாரிகள் பல்வீர் சிங் மற்றும் அவருடன் பணியாற்றிய 14 காவலர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

நெல்லை: கைதிகளின் பற்களை கொடூரமாக பிடுங்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் நெல்லை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் ஆகிய காவல் நிலையங்களில் கடந்த 2023 ஆம் ஆண்டு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களை அப்போதை உதவிய காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங், கட்டிங் பிளேயர் மற்றும் ஜல்லிக் கற்களைப் பயன்படுத்தி பற்களை கொடூரமாக பிடுங்கி சித்திரவதை செய்ததாகப் புகார்கள் வெளிவந்தன.

.................................

இது குறித்து பாதிக்கப்பட்டவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாடசாமி அளித்த பேட்டியில், "இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் தரப்பில் குற்றம் நிரூபிக்கப்பட்டது மட்டுமல்லாமல் மிகப்பெரிய மனித உரிமை மீறல் நடந்துள்ளது. எனவே, இந்த வழக்கை மாவட்ட நீதிமன்றம் விசாரணை செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்த நிலையில் நீதிபதி அதனை ஏற்றுக் கொண்டார். மேலும் இந்த வழக்கில் விசாரணை நியாயமாக நடைபெறும் என்று நம்புகிறோம்" என்றும் அவர் தெரிவித்தார்.

Full Media Report



Join us for our cause