for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

தூத்துக்குடி மாவட்டத்தில் எந்தவித ஆயுதமும் இல்லாமல் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறக்கூடாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்களைச் சுட்டுக் கொன்றது நாகரிகமான சமுதாயமா என்றும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது ஏற்புடையதா என்றும் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

...........

மதுரையைச் சேர்ந்த பீபில்ஸ் வாட்ச்(peoples watch) என்ற அமைப்பின் நிறுவனர் ஹென்றி திஃபேன், உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 நபர்கள் பலியாகினர். இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வந்தது. தொடர்ந்து இந்த கொடூர சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசிற்குத் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பியது.

.............

Full Media Report



Join us for our cause