துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் ஹென்றி திபேன் வழக்கு தொடர்ந்தார். மீண்டும் தேசிய மணித உரிமை ஆணையம் விசாரிக்க கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அளித்திருந்த அறிக்கை, சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு, நீதிபதிகள் நிஷா பானு, என் மான அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. தய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைத்தது, இழப்பீடு வழங்கியது என, தமிழக அரசின் அறிக்கை அடிப்படையில், வழக்கை முடித்திருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது, சீலிடப்பட்ட உறையில் இருந்த அறிக்கைகளை பரிசீலித்த நீதிபதிகள், தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணை அறிக்கை மற்றும் புலனாய்வு பிரிவின் அறிக்கை, அரசுக்கு கிடைத்ததா என்பது குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அறிக்கை நகல் அரசுக்கு வரவில்லை." என்றார். புகார் அளித்த தனக்கு கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை' என, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, புகார் அளித்தவரின் தரப்பை கேட்காமல், தேசிய மனித உரிமை ஆனையம், வழக்கை முடித்து வைத்தது எப்படி என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். விசாரணையை தள்ளி வைத்தனர்