''தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி நியமனம்'' - உச்ச நீதிமன்றத்தில் ஹென்றி திபேன் வழக்கு! - TAMIL NADU DGP
டிஜிபி சங்கர் ஜிவால் 31 ஆம் தேதி ஓய்வு பெறுகின்ற காலகட்டத்தில் வெங்கட்ராமன் என்ற நபரை பொறுப்பு டிஜிபியாக நியமிக்க சமூக நீதி அரசு 'பொறுப்பு' என்ற புதிய சொல்லை கண்டுபிடித்து இருக்கிறது.
சென்னை: தமிழ்நாடு அரசின் சமீபத்திய பொறுப்பு டிஜிபி நியமனம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு முரணானது என்று குறிப்பிட்டு ''மக்கள் கண்காணிப்பகம்'' நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் உச்ச நீதிமன்றத்தில் 'நீதிமன்ற அவமதிப்பு' வழக்கு தொடர்ந்துள்ளார்.
………………………
இந்த வழக்கு குறித்து ஹென்றி திபேன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 2006 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பிரகாஷ்சிங் vs யூனியன் ஆஃப் இந்தியா என்ற வழக்கில் 7 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதில் முக்கியமானது. ஒரு மாநிலத்தில் டிஜிபி பொறுப்பில் இருப்பவருக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டு அவருடைய பணியின் காலம் இருக்க வேண்டும்.
இக்குறிப்பிட்ட பணி காலத்தில் அவரது ஓய்வு தேதி வந்தாலும் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் இருக்க வேண்டும் என்பது தான் அந்த உத்தரவுகளில் ஒன்று. ஆனால் பல மாநிலங்கள் இதனை கடைப்பிடிக்காமல் இருந்தன. தமிழகத்தைப் பொறுத்தவரை காவல்துறை தலைவர் சார்ந்த உத்தரவு என்ற காரணத்தால் அந்த ஆண்டிலிருந்து முறையாக உச்சநீதிமன்றத்தில் பிரகாஷ்சிங் வழிகாட்டு நெறிமுறை 2006 ல் கடைபிடிக்கப்பட்டுள்ளது.
………………………
