தமிழ்நாட்டில் ஆளும் திமுக ஆட்சியில் ஏற்படும் காவல் நிலைய மரணங்கள் மீது உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளத் தவறி விட்டதாக மனித உரிமை செயல்பாட்டாளர்கள் குற்றம்சுமத்துகின்றனர். 'புதிய அரசு பொறுப்பேற்றவுடன் காவல்நிலைய மரணங்கள் தொடர்பாக மூன்று தீர்ப்புகள் அடங்கிய புத்தகங்களைக் கொடுத்தோம். அதன்படி, இந்த அரசு செயல்பட்டிருந்தால் காவல் மரணங்கள் தொடர்ந்திருக்க வாய்ப்பில்லை' எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
...................................................................................................................................................................................................................................................................
இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்தாலும், காவல்நிலைய மரணங்களின் மீது அரசு அலட்சியம் காட்டுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, ''விக்னேஷ் மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனை அறிக்கையை கடுமையாகப் போராடித்தான் பெற்றோம்'' என்கிறார், மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் செயல் இயக்குநரும் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஹென்றி திபேன்.
'' விக்னேஷ் வழக்கில் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடந்தது. கடந்த மே 3 ஆம் தேதிதான் அதன் அறிக்கை கிடைத்தது. அத்தனை நாள்கள் வரையில் அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் காட்டாமலேயே வைத்திருந்தது.
மேலும், 'சட்டபூர்வ உரிமை உள்ளவர்களிடம்தான் கொடுக்க முடியும்' என்றனர். நாங்களும் சட்டப்பூர்வ உரிமை உள்ள ஒருவரைக் கூட்டிச் சென்றோம். அதன்பிறகு அதற்கான சான்று வாங்கி வரச் சொன்னார்கள். அவர்களிடம் ஆதார், பான் கார்டு, ரேசன் அட்டை என எதுவுமே இல்லை. இதன்பிறகு கடும் போராட்டத்துக்குப் பிறகு மே 3 ஆம் தேதி பிரேதப் பரிசோதனை அறிக்கையை கொடுத்தனர். முன்னரே அது வெளிவந்திருந்தால் 26 ஆம் தேதி சட்டசபையில் முதல்வர் உண்மையைப் பேசியிருப்பார். இதற்கிடையில் விக்னேஷ் மரணத்துக்கு வலிப்பு நோய் காரணம் என அவருக்கு யார் அறிக்கை கொடுத்தது?'' என கேள்வி எழுப்புகிறார், ஹென்றி திபேன்.
.........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................