இதுதொடர்பாக தருமபுரியில் அவர் கூறியதாவது:
தருமபுரி மாவட்டம் சித்தேரியில் உள்ள எஸ்டி மலைவாழ் மக்களுக்கு போதிய வேலைவாய்ப்பு இல்லை. இதனால், இடைத்தரகர்களின் ஆசை வார்த்தையை நம்பியும், ஏமாற்றப்பட்டும், ஆந்திர மாநிலத்துக்கு செம்மரங்கள் வெட்ட செல்லும் நிலை உள்ளது. ஏற்கெனவே கடந்த, 5 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியை சேர்ந்தவர்கள், ஆந்திர மாநில வனத்துறையால் கொல்லப்பட்டனர். தற்போது, இதே போன்ற நிகழ்வில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக தருமபுரி ஆட்சியர் மற்றும் எஸ்பி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலவச சட்ட மையமும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளவில்லை. சித்தேரியில் உள்ள மலைக் கிராம மக்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்கும் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.செம்மரக்கட்டைகளை வெட்ட செல்லும் நிலையை தடுக்க வேண்டும். மேலும், இப்பகுதியில் உள்ளவர்களை கொலை செய்த, ஆந்திர வனத்துறையினர் மீது வழக்கு தொடுப்பதுடன், ஆந்திரா சிறையில் உள்ளவர்களை, விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.