சிபிஐ வழக்கை எதிர்கொள்வோம் என மக்கள் கண்காணிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
சென்னை: வெளிநாடுகளிலிருந்து நன்கொடை பெறுவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மதுரையிலுள்ள மக்கள் கண்காணிப்பு தொண்டு நிறுவனம் மீது எட்டு பிரிவுகளின் கீழ் சிபிஐ அலுவலர்கள் நேற்று ஜன.8ஆம் தேதி, வழக்குப்பதிவு செய்துள்ளதைத் தொடர்ந்து மக்கள் கண்காணிப்பின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன்ச் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து முகநூல் மூலம் ஹென்றி அளித்துள்ள விளக்கத்தில்,"நேற்று மதுரையில் மக்கள் கண்காணிப்பகம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து சோதனை செய்தனர்.
சமூக சிந்தனை மையத்தில் உள்ளவர்கள் சட்டத்தை மதிப்பவர்கள்; வெளிப்படைத் தன்மை உடையவர்கள் எங்கள் இயக்கம் என தெரிவித்தார்.
வழக்குப்பதிவு
"மக்கள் கண்காணிப்பகம் கடந்த 2010ஆம் ஆண்டு முதலே தொடர்ந்து, கணக்குகள் அரசுக்கு அனுப்பிய பிறகு மதுரையிலுள்ள 70 குழுக்கள் சேர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, பொது வாழ்விலுள்ள நபர்களிடம் அரசுக்குக் காட்டுகின்ற புத்தகங்கள் ஒவ்வொரு நபரும் பெரும் வருமானம் குறித்தும் பணிகள் குறித்தும் நாங்கள் முறையாகக் காண்பித்துள்ளோம்," என்றார்.
மேலும், எங்கள் கணக்கு விவரங்களை ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர்கள், தேர்தல் அலுவலர்கள், ஐஏஎஸ் அலுவலர்கள் ஆகியோர் பார்த்து உள்ளார்கள் என்றும் அவர் கூறினார்.
"கணக்குகளை முறையாக வைப்பது கடமை என்று கருதுபவர் நாங்கள்; அதை விட்டுத் தப்பி ஓடுபவர்கள் நாங்கள் கிடையாது. மேலும், தற்போது சிபிஐ வழக்குப் பதிவு செய்து இருப்பது ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் கடந்த 2010 முதல் 2012ஆம் ஆண்டு வரை கூட்டுச் சதி செய்து சட்டங்களை நாங்கள் கடைப்பிடிக்கவில்லை என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
எங்கள் வாயை அடைப்பதற்கு நீங்கள் சிபிஐயை பயன்படுத்தியுள்ளீர்கள், அது நிச்சயம் உங்கள் நோக்கத்தை அடையாது," என குற்றம் சாட்டினார்.
மக்கள் ஆதரவு
"நாங்கள் சிபிஐ விசாரணைக்கு, முழு ஆதரவு கொடுப்போம்; ஆனால், அரசியல் கண்ணோட்டத்துடன் மனித உரிமை பணியில் ஈடுபட்டுள்ள எங்களின் வாயை அடைக்க நினைத்தால் அது நிச்சயமாக முடியாது என்பதை பகிரங்கமாக தெரிவித்துக் கொள்கிறோம்," என தெரிவித்தார்.