காவல்துறை விசாரணையில் அஜித் குமாருக்கு நடந்தது என்ன? – நீதிமன்ற விசாரணையின் போது தெரியவந்த பகீர் உண்மை
அஜித் குமார் உடலின் 44 இடங்களில் காயங்கள், முகம், பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தூவி கொடுமைப்படுத்திய காவல்துறை.
காவலர்களால் தாக்கப்பட்டு திருப்புவனம் இளைஞர் உயிரிழந்த வழக்கில் காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். காவல்துறை விசாரணையின் போது கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை, நீதிபதிகள் S.M.சுப்பிரமணியம், மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.
அப்போது, நகை திருட்டு தொடர்பாக புகார் கொடுத்த நிகிதா, ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் நெருங்கிய உறவினர் எனவும், அதனால் தான் முறையாக விசாரணை நடத்தாமல் இளைஞர் தாக்கப்பட்டதாகவும் வழக்கறிஞர் ஹென்றி திபேன் வாதிட்டார்.
............................................................................
