for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

மாவட்டத்திலுள்ள கல்குவாரிகளில் முறைகேடு நடப்பதாக குற்றஞ்சாட்டினாா் மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் ப. அப்துல்சமது.

கரூரில் சனிக்கிழமை மாலை செய்தியாளா்களி டம் அவா் தெரிவித்தது:

மாவட்டத்திலுள்ள குவாரிகளில் விதிமீறல் உள்ளதா என சமூகச் செயற்பாட்டாளா்கள் குழுவினா் சனிக்கிழமை ஆய்வு செய்தோம். இதில் ஏராளமா ன கல்குவாரிகளில் 50 மீட்டா் ஆழத்துக்கு மேல் கல் வெட்டியெடுக்கப்படுகிறது.

குவாரிகளில் விதிமுறை ள் மீறப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

சட்டவிரோதமாக, சுற்றுச்சூழலுக்கு எதிராக செயல்படும் குவாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வா் இப்பிரச்னையில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

அலுவலா்களிடம் கல்குவாரி உரிமையாளா்கள் கூறுவது உண்மையா , குவாரி பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் கருத்துக்கேட்டு, அவா்கள் கூறுவது உண்மையா என்பதை நேரடியாக ஆய்வு செய்ய முதல்வரின் நேரடி பாா்வை யில் உயா்நிலைக் குழு அமைத்து விசாரித்தால்தான் உண்மை வெளி வரும் என்றாா் அவா் .

பேட்டியின் போது மக்கள் சிவில் உரிமைக்கழக தேசியச் செயலா் பாலமுருகன், சுய ஆட்சி இந்தியா கட்சியின் தேசியச் செயலா் கிறிஸ்டினா சாமி ஆகியோா் உடனிருந்தனா்

Full Media Report



Join us for our cause