கரூர் க.பரமத்தி குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ஜெகநாதன். அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல் குவாரியை மூட நடவடிக்கை எடுத்தார். இதனால் ஏற்பட்ட விரோதத்தில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். க.பரமத்தி போலீசார் கொலை வழக்குப்பதிந்து குவாரி உரிமையாளர் செல்வகுமார் உட்பட 3 பேரை கைது செய்தனர். இந்தநிலையில் கொலை குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் ஆய்வு செய்ய, உண்மை கண்டறியும் குழு என்ற பெயரில் கள ஆய்வு நடத்திட இந்திய ெபாதுவுடமை கட்சியைச் சேர்ந்த வக்கீல் மோகன், மணப்பாைற எம்.எல்.ஏ. அப்துல்சமது உள்ளிட்ட 9 பேர் அடங்கிய குழுவினர் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.