மதுரை, அக்.3- கரூரில் கல்குவாரிக்கு எதிராகப் போராடி யவர் லாரி ஏற்றி கொல்லப்பட்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமைக் காப்பாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கல்குவாரியை நேரடியாக ஆய்வு செய்த பின் மனித உரிமைக் காப்பாளர்கள் சார்பில் திங்களன்று மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுயஆட்சி இந்தியா தேசியத் தலைவர் கிறிஸ்டினா சாமி கூறியதாவது:- கரூர் மாவட்டத்தில் அரசின் அனுமதியின்றி செயல்பட்ட கல்குவாரிக்கு எதிராகப் போராடிய குப்பம் ஊராட்சி காளிபாளையத்தைச் சேர்ந்த வர் ஜெகநாதன். சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிக்கு எதிராக கரூர் ஆட்சியரிடம் புகார் மனுக்கொடுத்தார். இதையடுத்து அவர் செப்.10 ஆம் தேதி வேன் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். சம்மந்தப்பட்ட கல்குவாரியில் மனித உரி மைக் காப்பாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் கள ஆய்வு நடத்தப்பட்டது. கல்குவாரிகளில் அரசின் விதியை மீறி பல்வேறு முறைகேடுகள் நடந்துள் ளன. 150 அடி ஆழத்திற்கு அனுமதி பெற்று 700 அடிக்குமேல் தோண்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்ட தோடு இயற்கைவளங்களும் அழிந்துள்ளன. அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ள னர். இதில் நடந்த முறைகேடுகளைக் கண்டறிய தமிழ்நாடு அரசின் முதன்மைச்செயலர் தலை மையில் சிறப்புக்குழு அமைத்து அக்குழுவில் ஐஐடியில் கனிமவளத்துறை நிபுணர்கள், அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லு நர்கள், வேளாண் பல்கலைக்கழக பேராசிரி யர்கள்,மனோன்மணீயம் சுந்தரனார் பல்க லைக்கழக பேராசிரியர்கள், கனிமவளத்துறை நிபுணர்கள் அடங்கிய குழு அமைத்து இதுவரை வெட்டி எடுக்கப்பட்ட கனிம வளத்தின் அளவைக் கணக்கீடு செய்து அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை அறிக்கையாக அளிக்க வேண்டும். திருச்சிராப்பள்ளி மண்டல ஐஜி சந்தோஷ் குமார் நேர்மையான விசாரணை நடத்தி தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அவ ரது குடும்பத்தினருக்கு தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.