கடலூர் மாவட்டம், கண்ணகி - முருகேசன் ஆணவக்கொலை வழக்கில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு 13 பேர் குற்றவாளிகள் என்று எஸ்.சி., எஸ்.டி சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் அதிரடி தீர்ப்பளித்திருந்தது. அதைத் தொடர்ந்து, முருகேசனின் பெற்றோர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கூட்டியிருந்தது. இந்த நிலையில், 'சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான பொது உரையாடல் நிகழ்ச்சி' 30.10.2021 அன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ``இந்த அமர்வின் முக்கிய நோக்கம், ஆணவப்படுகொலையைத் தடுப்பதற்கு என ஒரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். மாநில அரசே அந்தச் சட்டத்தை இயற்ற வேண்டும்.
...................................
மக்கள் கண்காணிப்பகமும், இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையமும் இணைந்து அந்தத் தேக்கத்தை உடைத்துப் பேசுவோம் என்று அழைப்பு விடுத்ததன் பேரில்தான் இன்று இந்த நிகழ்ச்சி நடந்துவருகிறது. இந்த ஆணவக்கொலைகள்... உண்மையாகவே அறியாமையால், மூடத்தனத்தால் வந்தவைதான். சாதிவிட்டு சாதி திருமணம் செய்வதைத் தடுக்க வேண்டும். அவர்களைப் படுகொலை செய்ய வேண்டும். தருமபுரியை எரித்ததுபோல எரிக்க வேண்டும். என்பதெல்லாம் சாதிமீதுள்ள பாசத்தால் நடப்பதல்ல... தலித் Vs தலித் அல்லாதவர் எனப் பிரிக்க வேண்டும் என்ற யுக்திதான் இது. அதன் மூலமாக அவர்களால் ஓட்டுகளைப் பிரித்துக்கொள்ள முடியும்.