இலங்கை கடற்படையினர் தனது கணவர் ராஜ்கிரணை அடித்தோ அல்லது சுட்டுக்கொன்று விட்டதாக சந்தேகம் எழுந்துள்ளதாக மனு அளித்தார்
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டின சேர்ந்த இறந்த மீனவர் ராஜ்கிரணின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது மனைவி ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்
இலங்கை கடற்படை கப்பல் மோதியதில கடலில் விழுந்து மூழ்கி இறந்த மீனவர் ராஜ்கிரன் உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுததிஅவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைபட்டினத்தில் இருந்து கடந்த 10 தினங்களுக்கு முன்பாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் மீனவர்களின் படகு மூழ்கியது. இதில் ராஜ்கிரண் என்ற மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்ததாகவும் மற்ற இரண்டு பேரை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது சிறையில் அடைத்துள்ளனர்
இந்நிலையில் மத்திய மாநில அரசுகளின் முயற்சியால் இறந்த மீனவர் ராஜ்கிரன் உடல் கோட்டைப்பட்டினம் கொண்டுவரப்பட்டது அதற்கு முன்னதாக இலங்கையில் அவரது உடல் பிரத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு தான் இலங்கை கடற்படையினர் தமிழக கடற்படையிடம் அவரது உடலை ஒப்படைத்தனர். கோட்டைப்பட்டினத்துக்கு, ராஜ்கிரண் உடல் வந்தவுடன், அரசு சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இறந்த மீனவர் ராஜ்கிரண் குடும்பத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்பட்டது.அதன் பின்னர் இறந்த மீனவர் ராஜ்கிரண் உடல் அடக்கம் செய்யப்பட்டது,
இந்நிலையில் ராஜ்கிரன் மனைவி பிருந்தா மற்றும் அவரது உறவினர்கள் இன்று புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.அந்த மனுவில், தனது கணவர் ராஜ்கிரணை அடித்தோ அல்லது சுட்டுக்கொன்று விட்டதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும், அடக்கம் செய்யும்போது கணவர் உடலை தன்னை பார்க்க அனுமதிக்கவில்லை என்றும், மீண்டும் அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனையை மூன்று மருத்துவர்கள் குழு முன்னிலையில் நடத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார். எனவே தமிழக அரசு சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்து இலங்கை கடற்படையினரை குற்றவாளியாக சேர்த்து கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.