for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

தருமபுரி: ஆந்திராவில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக மக்கள் கண்காணிப்பகம் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

"வனத்துறையின் கட்டுப்பாட்டில் தமிழக கூலித் தொழிலாளர்கள் இருவர் மரணம். வழக்கை திசை திருப்ப வனத்துறை, காவல்துறை கூட்டுச் சதி" என்ற தலைப்பில் கள ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், பிரதட்டூரில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடி சமூகத்தை சேர்ந்த ராமன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

மக்கள் கண்காணிப்பகம் அறிக்கை

தருமபுரி மாவட்டம் சித்தேரி ஊராட்சி பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள் ராமன் என்பவரது மகன் ராமன். செவத்தான் என்பவரது மகன் பாலகிருஷ்ணன். கூலித்தொழிலாளர்களான இவர்கள் இருவரும் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், பிரதட்டூரில் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இவர்கள் இருவரின் மரணம் குறித்தும், 26.11.2021 அன்று ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், பிரதட்டூரில் நள்ளிரவில் ஆந்திர மாநில வனத்துறையினரால் நடத்தப்பட்ட விபத்து குறித்தும், உண்மையை வெளிக்கொணர மக்கள் கண்காணிப்பகம் சார்பில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கள ஆய்வின் மூலம் திரட்டப்பட்ட தகவல்கள், ஆவணங்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட "வனத்துறையின் கட்டுப்பாட்டில் தமிழக கூலித் தொழிலாளர்கள் இருவர் மரணம். வழக்கை திசை திருப்ப வனத்துறை, காவல்துறை கூட்டுச் சதி" என்ற தலைப்பில் கள ஆய்வு அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தர்மபுரி - கிருஷ்ணகிரி பிரதான சாலையில், நாலு ரோடு அருகில், முத்து இல்லம் என்ற இடத்தில் மக்கள் கண்காணிப்பகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. மக்கள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வரும் தகவல்கள் கூறப்பட்டுள்ளது.

மரம் வெட்ட சென்றவர்கள்

தருமபுரி மாவட்டம் அரூர் தாலுகா, சித்தேரி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் பழங்குடி சமூகத்தினர் கூலி வேலை செய்வதற்காக கடந்த நவம்பர் மாதம் ஓசூர் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து ஒரு லாரியில் 50 கூலித்தொழிலாளர்கள் ஏற்றிச் செல்லப்பட்டு சுமார் 300 கிலோ மீட்டர் பயணத்திற்கு பின் ஆந்திர மாநிலம் வனப்பகுதியில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்து அடர்ந்த வனப்பகுதிக்கு மரம் வெட்டுவதற்காக அழைத்து செல்லப்பட்டனர். ஒருநாள் முழுவதும் காட்டுப்பகுதியில் நடந்து சென்ற நிலையில் வனத்துறையினர் தேடுதல் வேட்டை நடத்துவதாக தகவல் வந்த நிலையில் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மீண்டும் 50 தொழிலாளர்களும் ஒரு நாள் நடக்க வைத்து வேறு ஒரு இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பின்னர் ஆந்திர மாநில பதிவெண் கொண்ட டாடா வேன் மூலம் வேறு ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த வேன் கடப்பா மாவட்டம் பிரதட்டூர் காவல் நிலையத்தில் இருந்து சுமார் 8 கிமீ தொலைவில் சென்று கொண்டிருந்தபோது அந்த வேனை வனத்துறையினர் விரட்டி உள்ளனர்.

போலீசுக்கு பயந்து குதித்தவர்கள் பலி

இதை பார்த்த ஓட்டுநர் பயந்து போய் வேனை ஓரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து அந்த டாடா வேனை வனத்துறையினர் கைப்பற்றி காவல்நிலையத்திற்கு ஓட்டிச் சென்றனர். வனத்துறையிடம் சிக்கிக்கொண்டோம் என்பதை அறிந்த கூலித் தொழிலாளர்கள் பயந்து போய் வேன் வேகமாக சென்றிருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் வழியில் குதிக்க ஆரம்பித்தனர். இதில் ராமன் என்பவரும் பாலகிருஷ்ணன் என்பவர் வேனில் இருந்து குதித்தபோது பலத்த காயம் அடைந்து இறந்துவிட்டனர். மேலும் வேனில் இருந்து குதித்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வழக்கை பொறுத்தவரை விபத்து ஏற்பட்டுதான் உயிரிழப்பு நடந்துள்ளதாக காவல்துறை பொய்யான தகவல் அளித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் தெரியாதவர் என கூறப்பட்டுள்ள நிலையில் அவரது உடல் சித்தேரி கிராமத்தில் சாலையோரத்தில் வீசப்பட்டுள்ளது.

மனைவியிடம் காண்பிக்காமல் புதைப்பு

இது சம்பந்தமாக ஆந்திரா அல்லது தமிழக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது மட்டுமின்றி பாலகிருஷ்ணன் உடல் குடும்பத்திற்கு காட்டாமல் அவசர அவசரமாக புதைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேள்வி கேட்டதால் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து மனைவியிடம் காண்பித்து விட்டு அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு மீண்டும் உடலை புதைத்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே வேனில் பயணம் செய்த வேலு, தீர்த்தமலை, முருகன், கமலநாதன், சுப்பிரமணி ஆகியோரை வனத்துறையினர் கைது செய்து பிரதட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடப்பா சிறையில் அடைத்துள்ளனர். இதனால் தமிழகத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசுக்கு மக்கள் கண்காணிப்பகம் பரிந்துரை

வனத்துறையினருக்கு பயந்து அவசர அவசரமாக வேனில் இருந்து குதித்து உயிரிழந்த ராமன் மற்றும் பாலகிருஷ்ணன் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். இந்த சம்பவம் தொடரபாக மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிடவேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் காவல் உயர் அதிகாரி அந்தஸ்தில் இருப்பவரை வைத்து வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை செய்ய வேண்டும்.மேலும் பழங்குடியினர் மேல் ஆந்திர காவல்துறை மற்றும் வனத்துறையினரால் நடத்தப்படும் கொடுமைகளுக்கு எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும். பழங்குடி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கட்டாயப்படுத்தப்பட்ட தொழிலாளர்களாக, கொத்தடிமைகளாக தள்ளப்படாமல் இருப்பதற்கு தமிழக அரசு நிரந்தர தீர்வு காணவேண்டும்.

உடந்தைகள் மீது நடவடிக்கை தேவை

தமிழகத்திற்கு செம்மரம் கடத்தல் தொடர்பாக செயல்படும் ஏஜெண்டுகள் அவர்களின் தலைவர்கள் குறித்த தகவல்களை உளவுத்துறை மூலம் திரட்டப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் செம்மரம் வெட்டுவது சட்டவிரோதம் என்பதை உணர்த்தும் வகையில் கலைக் குழுக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேற்கண்ட மாவட்டங்களில் குடும்ப அட்டை முதல் சாதிச் சான்றிதழ் வரை அனைத்தும் பழங்குடியினருக்கு கிடைக்க வழிவகை செய்து அவர்களின் குழந்தைகள் கல்வித் தரத்தில் உயர்ந்திட தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும். இதுபோன்ற சம்பவங்களால் பாதிக்கப்படும் பழங்குடி மக்களுக்கு இலவச சட்ட உதவிகள் வழங்க மாவட் இலவச சட்ட ஆணைக்குழு தாலுகா கமிட்டி மூலமாக உதவி செய்ய வேண்டும் போன்ற பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ள

https://tamil.oneindia.com/news/dharmapuri/dharmapuri-tribesmen-die-in-andhra-pradesh-makkal-kankanipaggam-report/articlecontent-pf628707-442103.html

Full Media Report



Join us for our cause