ஆந்திர மாநிலத்தில் உயிரிழந்த தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக் கூடிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உள்ளதாக மக்கள் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளர் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி: தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப் பகுதியைச் சார்ந்த மலைவாழ் பழங்குடியின மக்கள் ஆந்திர மாநிலத்திற்கு செம்மரம் வெட்டும் தொழிலில் ஈடுபடுத்த, இடைத்தரகர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் இரண்டு பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தனர். இதில் ஒருவரது உடல் சித்தேரி மலைப் பகுதியில் வீசப்பட்டுக் கிடந்தது. மற்றொருவர் ஆந்திர மாநிலத்தில் அடையாளம் தெரியாத சடலமாக அடக்கம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக மக்கள் கண்காணிப்பு மையத்தின் உண்மை அறியும் குழுவினர் ஆந்திராவிற்கு சென்று விசாரணை செய்து அறிக்கையைத் தயார் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக மக்கள் கண்காணிப்பு மைய ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது “ஆந்திர மாநிலத்தில் வனத்துறையினரால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட ராமன் மற்றும் பாலகிருஷ்ணன் இருவரும் தருமபுரி மாவட்டம் சித்தேரியை சார்ந்தவர்கள்.
முதலமைச்சர் உதவி
பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற, காவல்துறை சித்திரவதையை, ஜெய்பீம் படத்தின் மூலம் அறிந்து இருளர் இன மக்களுக்குப் பல உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் செய்துள்ளார். இந்த செம்மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களும், மலைவாழ் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதை முதலமைச்சருக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
......................................