விழுப்புரம், அக். 31- ஆணவ கொலையை தடுத்து நிறுத்த சட்டம் இயற்ற வேண்டும் என்று ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு திருமாவளவன் வேண்டுகோள்விடுத் தார். ‘கண்ணகி - முருகேசன் படுகொலை வழக்கின் தீப்பை முன் நகர்த்துவோம், சாதிய ஆணவப் படுகொலைக்கு எதி ரான சட்டத்தை உருவாக்க வலியுறுத்தி யும் மக்கள் கண்காணிப்பகம், இளை ஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் ஆகியவை சார்பில் பொது உரையாடல் நிகழ்ச்சி விழுப்புரத்தில் நடைபெற்றது.
மக்கள் கண்காணிப்ப கத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் ஹென்றி திபேன் தலைமை வகித்தார்.
உயர் நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அரி பரந்தாமன், மூத்த குற்றவியல் வழக்குரைஞர் பா.மோகன் ஆகியோர் இணைய வழியாக கருத்துரைகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசுகையில், “கண்ணகி - முருகேசன் ஆணவப் படுகொலை நடைபெற்ற 18 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வந்துள்ளது. ஆனால், இந்த தீர்ப்பு குறித்து பேச முடியாத நிலையே இருந்து வந்தது. இது குறித்து தற்போது விரிவாகப் பேச மக்கள் கண்காணிப்பகமும், இளைஞர்களுக்கான சமூக விழிப்பு ணர்வு மையமும் ஏற்பாடு செய்துள்ளது” என்றார்.
தேசிய அளவில் ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் இஸ்லாமியர்கள், கிறிஸ்த வர்களுக்கு எதிரான நிலையை பாஜக வும், சானாதன அமைப்புகளும் முன்னெ டுத்து வருகின்றன. தமிழகத்தில் அந்த நிலைப்பாட்டை மாற்றி, தலித்து களுக்கு எதிரான நிலைப்பாட்டை முன்னெடுக்கின்றன. குறிப்பாக, இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்க ளுக்கும் எதிராக மற்றவர்களை ஒருங்கி ணைத்தல், தமிழகத்தில் தலித்து களுக்கு எதிராக மற்ற சாதியினரை ஒருங்கிணைத்தல் என்று திட்டமிட்டு செய்யப்பட்டு வருகிறது என்றும் திரு மாவளவன் கூறினார். துரை.ரவிக்குமார் எம்.பி., சிந்த னைச் செல்வன் எம்எல்ஏ, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர அப்துல் சமது எம்எல்ஏ, விழுப்புரம் மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் எஸ்.முத்துகுமரன், எஸ்டிபிஐ கட்சித் தலைவர் நெல்லை முபாரக், சிபிஐ மாநிலக் குழு உறுப்பி னர் ஏ.வி.சரவணன், மதிமுக அமைப்புச் செயலாளர் வந்தியத்தேவன், இளை ஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தின் ரமேஷ்நாதன், வழக்குரை ஞர் பூங்குழலி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் முஸ்தாக்தீன், விசிக மாவட்டச் செயலாளர் ஆற்றலரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டர்.