for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

அஜித்குமார் லாக் அப் மரணம் – சாட்சியங்கள் எங்கே? அழித்துவிட்டீர்களா? : போலீஸுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!

அஜித்குமார் லாக் அப் மரண வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை செய்து அறிக்கையை ஜூலை 8ஆம் தேதி தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ajithkumar lock up death chennai high court order

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடபுரத்தைச் சேர்ந்த அஜித்குமாரை நகை திருட்டு வழக்கில், ஜூன் 27ஆம் தேதி மானாமதுரை உட்கோட்ட சிறப்பு படை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

.........................................................................

இந்த வழக்கு விசாரணையின் போது, மனித உரிமை போராளியும் வழக்கறிஞருமான ஹென்றி திபேன் ஆஜராகி, “காவல்துறையினர் அஜித்குமாரை பிளாஸ்டிக் பைப், இரும்பு ராடுகளை கொண்டு தாக்கியுள்ளனர்” என்று கூறி சில புகைப்படங்களை தாக்கல் செய்தார். 

போலீசார் அஜித் குமாரை தாக்கும் வீடியோவும் போட்டு காண்பிக்கப்பட்டது. 

தொடர்ந்து வாதாடிய வழக்கறிஞர் ஹென்றி திபேன், “முதலில் தென்னை தோப்பில் வைத்து அஜித்குமாரை போலீசார் தாக்கி துன்புறுத்தியுள்ளனர். போலீசார் அஜித்குமாரை தாக்கும் போது, அந்த சமயத்தில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருப்புவனம் காவல் நிலையத்தில் தான் இருந்துள்ளார். 

அஜித் குமார் இறந்த பிறகு அவரது உடல் மதுரைக்கு கொண்டுவரப்பட்டது சந்தேகத்தை எழுப்புகிறது. 

அஜித் குமாரின் தாயாரும் சகோதரரும் 28ஆம் தேதி இரவு 12 மணி வரை மகன் குறித்து போலீசாரிடம் கேட்டுள்ளனர். அப்போது திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்த எஸ்பி, அஜித் குமார் அம்மாவிடம் உங்கள் மகன் இறந்துவிட்டார் என தெரிவித்திருக்கிறார்” என வாதங்களை முன் வைத்தார்.

...................................................................

Full Media Report



Join us for our cause