Media

The case, earlier registered under sections of suspicious death, was modified to a murder case after the post-mortem found 13 injuries on the body All India Written by J Sam Daniel StalinUpdated: May 07, 2022 8:51 am IST...

Chennai: Nine police personnel, including inspector Senthil Kumar, and sub-inspector of Pugazhum Perumal police station appeared before the CB-CID investigation officer on Friday. Executive director of People’s Watch Henri Tiphagne claimed that the police were still trying to tamper...

The Crime Branch-CID of the Tamil Nadu police on Saturday arrested five policemen and one Home Guard for their involvement in the death of Vignesh in custody here on April 19, police sources said. Acting on the instructions...

News The police had claimed that Vignesh had suffered a fatal seizure on April 19 His family said he had no such medical history and alleged he was tortured by police Vignesh was brutally hit from...

Human rights activist Henri Tiphange said that a murder case has to be filed against the police officers responsible (who are suspended), the station house officer and those were on night rounds. “Witnesses and victims need protection and...

புதிய தலைமுறை தொலைக்காட்சி - நியூஸ் 360 நிகழ்ச்சி - உயிரிழந்த கைதியின் உடலில் 13 காயங்கள்: அதிர வைக்கும் உடற்கூராய்வு அறிக்கை |வழக்கறிஞர் ஹென்றி திபேன்

சென்னையில் இளைஞர் விக்னேஷ் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரும் அவரது நண்பரும் காவல் துறையினால் எப்படி தாக்கப்பட்டார்கள் என்ற விவரங்களை வெளியிட்டுள்ளார் மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி டிஃபேன்.

V Vignesh was arrested by the Chennai police for allegedly possessing marijuana and a knife. On April 19, the following day, he died in police custody due to alleged custodial torture. While the officials have denied custodial violence, the family accuses...


ஏப்ரல் 18ஆம் தேதி இரவு 11 மணியளவில், வி விக்னேஷ் (வயது 23) மற்றும் அவரது நண்பர்களும் (ஆட்டோ ஓட்டுநர் பிரபு மற்றும் சுரேஷ்) சென்னை நகரின் கெல்லிஸ் பகுதிக்கு அருகே போதைப்பொருள் (கஞ்சா மற்றும் பட்டாக்கத்தி) வைத்திருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டனர். ஒரு நாள் கழித்து சென்னையில் உள்ள காவல்நிலையத்தில் 23 வயது இளைஞன் தாக்கப்பட்டு இறந்ததாக தகவல் வெளியானது. ஒரு வாரத்திற்குப் பிறகு, இந்த வழக்கில் அமைதியாக இருக்க காவல்துறை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ 1 லட்சம் வழங்கியதாக அவரது சகோதரர் கூறுகிறார். இதை தொடர்ந்து சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், விக்னேஷின் மூத்த சகோதரர் வினோத், “கைது செய்த நாளன்று இரவு 11.30 மணிக்கு, விக்னேஷின் முதலாளி ரஞ்சித் உள்ளிட்ட 5 பேர் கெல்லீஸ் சிக்னலுக்கு வந்து விக்னேஷ் தன்னிடம் பணி செய்வதை உறுதி செய்தும் காவலர்கள் தாக்குதலைத் தொடர்ந்தார்கள். காயமடைந்த சுரேஷை காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று ரிமாண்ட் உத்தரவு பெற்று புழல் சிறையில் அடைத்துள்ளனர். அதன்பிறகு என்னை பட்டினம்பாக்கம் காவல் ஆய்வாளர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். ஆயிரம் விளக்கு காவல் ஆய்வாளர் எங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை வழங்கினார். 29ஆம் தேதி காவலர்களால் கொடுக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாயை திருப்பி கொடுக்க சென்னை பெருநகர குற்றவியல் நீதித்துறை நடுவரிடம் மனு தாக்கல் செய்தோம். சம்மன் அனுப்பி வாக்குமூலம் பெற்ற பின் பணத்தை பெறுவதாக நீதிபதி கூறியுள்ளார்.” என்று கூறுகிறார். விக்னேஷ் உடலில் காயங்கள் இருப்பதாகவும் வினோத் குற்றம் சாட்டினார். “பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடலைப் பார்க்க நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. எங்கள் வீட்டு உரிமையாளரிடம் போலீசார் பேசி எங்களை வீட்டை காலி செய்யவைக்குமாறு மிரட்டினர்,” என்று வினோத் கூறினார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, “சந்தேகத்திற்கிடமான மரணம்” என்று வழக்குப் பதிவு செய்த போலீஸார், உதவி ஆய்வாளர் பெருமாள், காவலர் பவுன்ராஜ், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். “லாக்அப் டெத்தில் ஈடுபட்ட காவலாளிகளை பணிநீக்கம் அளிப்பது மட்டுமல்லாமல், அவர்களை கைது செய்யவேண்டும்”, என்று வழக்கறிஞர் ஹென்றி தீபன் கூறுகிறார். இந்த வழக்கு விசாரணை குற்றப்பிரிவு சிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. மனிதாபிமான அடிப்படையில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த வழக்கின் விசாரணை முழுமையாகவும், நியாயமாகவும் நடைபெறும் என்று உறுதியளித்தார். விக்னேஷுடன் கைது செய்யப்பட்ட சுரேஷின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என்றும் அவர் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.