for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

28 Jun 2023 Dual Horrors: Irula Women Victimized by Rape and Bonded Labor Face Police Apathy in Tamil Nadu People's Watch in Media Chennai

The victims were freed when a local human rights organization named People's Watch came to help and rescued them on May 28. Activists claim atleast 20 such women have complained sexual violence here. "One of the women gave a...

#Aseer, #AIDWA, #Aseervatham, #PeoplesWatch, #Tribals, #TamilnaduTribals, #BondedLabours
24 Jun 2023 மர வியாபாரி அரங்கேற்றிய பயங்கரம்... கதறும் சிறுமி, கர்ப்பிணி, பெண்கள்.. சினிமாவை மிஞ்சிய கொடூரம் People's Watch in Media Chennai

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இருளர் இன குடும்பங்களை அழைத்து வந்து செங்கல்பட்டில் மரவியாபாரி படூர் பாலு என்பவர் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபடுத்தி கொத்தடிமைகளாக வைத்திருந்ததுடன், பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்தார். பாலு மீது கொத்தடிமை, ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர். ஆனால் பாலு கைது செய்யப்படாத நிலையில், அனைத்திந்திய மாதர் சங்கம், பீபள்ஸ் வாட்ச் உட்பட பல்வேறு அமைப்புகள் கூட்டாக வந்து டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அனைத்திந்திய மாதர் சங்கத்தின் மாநில தலைவர் வாலண்டீனா, "படூர் பாலு பணிக்கு வந்த 10ம் வகுப்பு சிறுமி, கர்ப்பிணி, உட்பட 20க்கும் மேற்பட்டோரைத் தாக்கி தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவரைக் கைது செய்யாமல் இருப்பது கண்டனத்திற்கு உரியது எனவும் தெரிவித்தார். படூர் பாலு மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கூட்டாக இணைந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் போராட்டம் நடத்த இருப்பதாக அவர் எச்சரித்தார்

#Irular, #Tribals, #BondendLabours, #Aseer, #Aseervatham, #PeoplesWatch, #HenriTiphagne
23 Jun 2023 நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. கரூர் எஸ்பிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு! People's Watch in Media Madurai

இந்த வழக்கில் தொடர்ந்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஜராகாததால், நீதிமன்றத்தைத் தொடர்ந்து அவமதித்ததாக நீதிபதி நேற்று நடைபெற்ற விசாரணையில் கடுமையான கண்டனம் தெரிவித்தார். இனி வருகிற ஜூலை 5 அன்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கட்டாயம் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் எனக்கு நிச்சயம் நல்ல தீர்ப்பை நீதிமன்றம் வழங்கும்" என தெரிவித்தார்.

#HenriTiphagne, #KarurShanmugam, #KarurSP, #HRD, #JAACT
22 Jun 2023 பாளை. சிறையில் விசாரணை கைதி மரணம் 9ஆவது நாளாக உடலை வாங்க மறுப்பு People's Watch in Media Tirunelveli

பாளையங் கோட்டை மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்த விசாரணை கைதி தங்கசாமி மரண மடைந்ததையடுத்து அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 9 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தங்கசாமியின் மர ணத்திற்கு காரணமான புளியங்குடி காவல் நிலைய அதிகாரிகள், பாளை யங்கோட்டை மத்திய சிறை அதிகாரிகள் மீது கொலை  வழக்கும், பட்டியல் - பழங் குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்  வழக்கும் பதிவு செய்திட  வேண்டும். தங்கசாமி மர ணம் தொடர்பாக உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் பணியில் இருக்கும் நீதி பதியின் மூலம் முறை யாக விசாரணை மேற் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர் குடும் பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும். குடும் பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிடவேண்டும் என மனுவில் வலியுறுத்தப் பட்டிருந்தது. மனுவை சிபிஎம் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் எம். சுடலைராஜ்,  சி.பி.ஐ.எம்.எல் மாநில குழு உறுப்பி னர் ரமேஷ், மாவட்டச் செய லாளர் சுந்தர்ராஜ், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட நிர்வாகி முத்துவளவன்,மக்கள் கண்காணிப்பக வழக்கறிஞர் மாடசாமி, மற்றும் கலைக்கண்ணன் திருக்குமரன், தங்கசாமியின்  உறவினர்கள்,வாலிபர் சங்க முன்னாள் மாவட்டத் தலை வர் ராஜேஷ்  ஆகியோர்  கொடுத்தனர்.

#PeoplesWatch, #HenriTiphagne, #HenryTiphagne


Join us for our cause