People's Watch in Media

CHENNAI: The Advocate General of Tamil Nadu submitted in the Madras High Court that the State have not received investigation report conducted by the National Human Rights Commission (NHRC) regarding the 2018 Thoothukudi firing incident, in which 13 persons...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், மனித உரிமை ஆணையத்தில் புலனாய்வுப் பிரிவு அறிக்கையின் அடிப்படையிலும், தமிழக அரசின் அறிக்கையின் அடிப்படையிலும் வழக்கை முடித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான ஹென்றி திபேன் 'சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் மாலா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய மனித உரிமை ஆணையத்தின் 'புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கை, தமிழக அரசுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதா என்பது குறித்து பதிலளிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இன்று (செப் 27) மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது. தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கை நகல் தமிழக அரசுக்கு கிடைக்கப் பெறவில்லை என்று பதில் அளித்தார். அப்போது மனுதாரர் ஹென்றி திபேன். வழக்கை முடித்து வைத்து தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவில், தனது புகார் மனு குறித்து எந்த ஒரு பதிவும் செய்யவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவில் ஹென்றி திபேன் அளித்த புகாரைப் பற்றிய பதிவு இடம் பெறாதது ஏன் என்றும் புகார் அளித்தவர் தரப்பு வாதத்தை கேட்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அது குறித்து மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் அளிப்பதற்காக வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தனர்.

...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை அறிக்கை கிடைத்துள்ளதா என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதுதொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தியது. பி்ன்னர் அதன் புலனாய்வு பிரிவு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தனதுபுகாரின் அடிப்படையில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆணையம் தரப்பில் தாமாக முன்வந்து எடுத்த வழக்கின் அறிக்கை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது வழக்கறிஞர் ஹென்றி திபேன் ஆஜராகி, இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைத்துள்ளோம் என்றும், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுஅளித்த அறிக்கையின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தனது வழக்கை முடித்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. நீதிபதி அருணா ஜெகதீசனின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டாலும் அவரது பரிந்துரையின் அடிப்படையில் எந்தநடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை. இதில் பல்வேறு சட்ட விதிமீறல்கள் உள்ளன என குற்றம் சாட்டினார். அப்போது ஆணையம் தரப்பில், புதிதாக ஆதாரங்கள் ஏதும் இருந்தால் மனுதாரர் மீண்டும் ஆணையத்தை அணுகலாம். ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கையை வெளியிடுவது என்பது ஆணையத்தின் தனிப்பட்ட அதிகாரம் என வாதிடப்பட்டது. பின்னர் சீலிட்ட கவரில் இருந்த அறிக்கைகளை ஆய்வுசெய்த நீதிபதிகள், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை அறிக்கை, புலன்விசாரணை பிரிவின் அறிக்கை அரசுக்கு கிடைத்துள்ளதா, ஒருவேளை அறிக்கை கிடைத்துஇருந்தால் அதுதொடர்பாக எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கை குறித்தும் விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும்செப்.27-க்கு தள்ளி வைத்துள்ளனர்.


சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு அறிக்கையின் அடிப்படையில் வழக்கு முடித்துவைக்கப்பட்டது. இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தான் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கில், தாமாக முன்வந்து எடுத்த வழக்கின் விசாரணையை முடித்து வைத்த உத்தரவையும், புலன் விசாரணை பிரிவு அறிக்கையையும் மூடி முத்திரையிட்ட உறையில் ஆணையம் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹென்றி திபேன் ஆஜராகி, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைத்தது, பலியானவர்களுக்கு தலா 20 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியது என்று தமிழ்நாடு அரசு அளித்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டபோதும், அதன் அடிப்படையில் மேல்நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. விதிகளை மீறி மனித உரிமைகள் ஆணையமும் வழக்கை முடித்து வைத்துள்ளது என்றார். அதற்கு ஆணையம் தரப்பில், புதிதாக ஆதாரங்கள் இருந்தால் மனுதாரர் மீண்டும் ஆணையத்தை அணுகலாம் என்று உத்தரவிடபட்டுள்ளது. ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கையை வெளியிடுவது என்பது ஆணையத்தின் தனிப்பட்ட அதிகாரம் என்று வாதிடப்பட்டது. பின்னர், சீலிட்ட கவரில் இருந்த அறிக்கைகளை ஆய்வு செய்த நீதிபதிகள், தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணை அறிக்கை மற்றும் புலன் விசாரணை பிரிவின் அறிக்கை ஆகியவை அரசுக்கு கிடைத்துள்ளதா, இல்லையா என்று விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு அரசு தரப்பிற்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவின் அறிக்கை கிடைத்துள்ளதா? என தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக் கொள்ளப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், மனித உரிமை ஆணையத்தில் புலனாய்வுப்பிரிவு அறிக்கையின் அடிப்படையிலும், வழக்கை முடித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தான் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கில், தாமாக முன்வந்து எடுத்த வழக்கின் விசாரணையை முடித்த வைத்த உத்தரவையும், புலன் விசாரணை பிரிவு அறிக்கையையும் மூடிமுத்திரையிடப்பட்ட உறையில் ஆணையம் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (செப்.22) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஹென்றி திபேன் ஆஜராகி, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைத்தது, பலியானவர்களுக்கு தலா 20 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியது என போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அளித்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையை அரசு ஏற்றுகொண்டபோதும், அதன் அடிப்படையில் மேல்நடவடிக்கை ஏதும் இதுவரை எடுக்கவில்லை என தெரிவித்தார். விதிகளை மீறி மனித உரிமைகள் ஆணையம் வழக்கை முடித்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார். ஆணையம் தரப்பில், புதிதாக ஏதும் ஆதாரங்கள் இருந்தால் மனுதாரர் மீண்டும் ஆணையத்தை அணுகலாம் என உத்தரவிடபட்டுள்ளதாகவும், ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கையை வெளியிடுவது என்பது ஆணையத்தின் தனிப்பட்ட அதிகாரம் என்றும் வாதிடப்பட்டது. பின்னர், சீலிட்ட கவரில் இருந்த அறிக்கைகளை ஆய்வு செய்த நீதிபதிகள், தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணை அறிக்கை மற்றும் புலன் விசாரணை பிரிவின் அறிக்கை ஆகியவை அரசுக்கு கிடைத்துள்ளதா? இல்லையா? என விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு தரப்பிற்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அறிக்கை கிடைத்திருந்தால், அதன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

...

வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, என். மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஹென்றி திபேன் ஆஜராகி, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைத்தது, பலியானவர்களுக்கு தலா 20 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியது என போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அளித்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையை அரசு ஏற்று கொண்டபோதும், அதன் அடிப்படையில் மேல்நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என தெரிவித்தார். விதிகளை மீறி மனித உரிமைகள் ஆணையம் வழக்கை முடித்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார். ஆணையம் தரப்பில், புதிதாக ஏதும் ஆதாரங்கள் இருந்தால் மனுதாரர் மீண்டும் ஆணையத்தை அணுகலாம் என உத்தரவிடபட்டுள்ளதாகவும், ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கையை வெளியிடுவது என்பது ஆணையத்தின் தனிப்பட்ட அதிகாரம் என்றும் வாதிடப்பட்டது. பின்னர், சீலிட்ட கவரில் இருந்த அறிக்கைகளை ஆய்வு செய்த நீதிபதிகள், தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணை அறிக்கை மற்றும் புலன் விசாரணை பிரிவின் அறிக்கை ஆகியவை அரசுக்கு கிடைத்துள்ளதா, இல்லையா என விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு தரப்பிற்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அறிக்கை கிடைத்திருந்தால், அதன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.