People's Watch in Media
Chennai: The CB-CID has been entrusted with the investigation and tracing of a Tamil Nadu environmental activist Mugilan alias Shanmugham. Mugilan went missing on February 15 shortly after he claimed involvement of senior police officers in the police firing...
சுற்றுச்சூழல் ஆர்வலரான முகிலன் காணாமல் போனது தொடர்பாக எழும்பூர் போலீஸார் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞரான ஹென்றி டிபேன் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவில்,‘‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது கடந்தாண்டு மே 22-ம் தேதி போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் போலீஸ் உயரதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலரான முகிலன் சென்னையில் வீடியோ வெளியிட்டார். இந்த ஆதாரங்களை சிபிஐ வசம் ஒப்படைக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த பிப்.15 அன்று சென்னையில் இருந்து நாகர்கோவில் ரயிலில் மதுரைக்குச் சென்ற அவர் திடீரென மாயமாகியுள்ளார். திண்டிவனம் அருகே ஒலக்கூர் ரயில் நிலையத்துக்குப்பிறகு அவரது செல்போன் சிக்னல் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக போலீஸில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே அவரை கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’ என அதில் கோரியிருந்தார்.
Chennai: The Madras high court on Friday directed the Egmore police to file a status report on the action taken pursuant to a complaint seeking to trace anti-Sterlite activist Mugilan, who has been allegedly missing since February 15. A...
Chennai: The Madras high court on Friday directed the Egmore police to file a status report on the action taken pursuant to a complaint seeking to trace anti-Sterlite activist Mugilan, who has been allegedly missing since February 15. ...
சூழலியல் போராளி முகிலன் காணாமல் போய் 7 நாள்கள் ஆன நிலையில், அவரை மீட்டுத்தரக் கோரி சமூக இயக்கங்களின் கூட்டமைப்பு சென்னை மாநகர ஆணையரிடம் புகார் அளித்துள்ளது . சுற்றுச்சூழல் போராளியான முகிலன் ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தவர்கள் குடும்பத்துக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடுக்கு காரணம் சில காவல்துறை உயரதிகாரிகள்தான் என்றும், காவல்துறை, ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் அடியாட்கள் உதவியுடன்தான் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அரங்கேற்றியதாகவும், அதற்கான வீடியோவையும் ஆவணங்களையும் அண்மையில் சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார். இந்த நிகழ்வு முடிந்து ஊருக்குத் திரும்புவதற்காக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு எழும்பூர் ரயில் நிலையம் வந்த முகிலன் காணாமல் போனார்.
கோவையில் 2 வயது பெண் குழந்தைக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றியதாக அரசு ஆஸ்பத்திரி மீது குற்றம் சாட்டி பெற்றோர் பரபரப்பு புகார் தெரிவித்தனர்.
A two-year old girl baby has tested HIV positives, allegedly after transfusion of infected blood by a doctor at the Coimbatore Medical College Hospital (CMCH), triggering a controversy.
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 2 வயது பெண் குழந்தைக்கு எச்.ஐ.வி பரவியது தொடர்டாக டாக்டர், நர்சுகளிடம் விசாரணை நடக்கிறது. திருச்சியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி விஸ்வநாதன் திருப்பூரில் வசித்து வருகிறார். இதய நோய் இருப்பதாக இவரது 2 வயது பெண் குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இரண்டு வயது குழந்தை, எச்.ஐ.வி., தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருச்சி தம்பதிக்கு, அங்குள்ள அரசு மருத்துவமனையில், 2017 மார்ச், 6ல், இரட்டை குழந்தை பிறந்தது. பெண் குழந்தையை, 'இன்குபேட்டர்'ல் சிகிச்சை அளித்து, 32 நாட்களுக்கு பின் வீட்டுக்கு அனுப்பினர். குழந்தையின் தந்தை, திருப்பூரில் பணிபுரிந்து வரும் நிலையில், 2018, ஜூலை, 11ல், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையை, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.