for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

7 Jun 2019 முகிலன் இருப்பிடம்! சீலிட்ட கவரில் விஷயம் இருக்கு! People's Watch in Media Madurai

சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போய் இன்றுடன் 112 நாட்கள் ஆகிறது.  முகிலன் காணாமல் போனது பற்றி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு செய்யப்பட்டது.  இந்தப் பின்னணியில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தி ஒவ்வொரு முறையும் உயர்நீதிமன்றத்தில் வாய்தா வாங்கியது சிபிசிஐடி போலீசார்.  இந்த நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. உயர்நீதிமன்றத்தில் முகிலன் தரப்பில் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் ஆஜரானார். அப்போது சிபிசிஐடி போலீசார் ஒரு சீலிட்ட கவரை நீதிபதியிடம் கொடுத்து முகிலன் சம்பந்தமாக முக்கியமான தகவல்கள் இதில் உள்ளது என கூறினார்கள். அந்த விபரங்களை பார்த்த நீதிமன்றம் முகிலன் வழக்கை நான்கு வாரத்திற்கு தள்ளி வைப்பதாக கூறினார்கள்.  அப்போது முகிலன் தரப்பு வழக்கறிஞர் இரண்டு வாரத்திற்கு மட்டும் தள்ளி வைத்து முகிலனை ஆஜர்படுத்த வேண்டும் என கூறினார்கள்.  சிபிசிஐடி தரப்பு மேலும் ஒரு வாரம் அவகாசம் கேட்டதால் நீதிமன்றம் மூன்று வாரங்கள் தள்ளி வைத்து இதுதான் ஃபைனல் என கூறியது.  அனேகமாக அடுத்த விசாரணையின்போது முகிலன் சம்பந்தமான பிரச்சினைக்கு முழுமையான தீர்வை சிபிசிஐடி ஏற்படுத்தி கொடுக்கும் என தெரிகிறது. 

#ActivistMugilan, #Mugilan, #HumanRightsDefender, #HumanRightsDefenderMugilan, #HenriTiphagne, #PeoplesWatch, #Nakkheeran
7 Jun 2019 Missing anti-Sterlite activist Mugilan: CB-CID says it has got 'important lead' People's Watch in Media Madurai

CHENNAI: The CB-CID police probing the anti-Sterlite activist R S Mugilan missing case on Thursday informed the Madras high court that they have got “important lead” in the case. Additional public prosecutor R Prathap Kumar made the submission...

#TimesofIndia, #TheTimesofIndia, #TOI, #PeoplesWatch, #HenriTiphagne, #HumanRightsDefender, #Mugilan, #HRDMugilan
7 Jun 2019 Tamil Nadu: CB-CID informs Madras HC it has got 'clues' on missing activist Mugilan People's Watch in Media Chennai, Tamil Nadu

Chennai: The CB CID sleuths probing the 'disappearance' of environmental activist R.S. Mugilan, who involved himself actively in anti-Sterlite protests and other pro-people movements, has informed the Madras High Court on Thursday that they have got vital clues in the case....

#MumbaiMirror, #HenriTiphagne, #PeoplesWatch, #Mugilan, #HRDMugilan, #HumanRightsDefender, #HumanRightsDefenderMugilan
7 Jun 2019 TEST People's Watch in Media Madurai

#media
4 Jun 2019 105 நாட்கள்... எங்கே முகிலன்? நல்லக்கண்ணு, நெடுமாறன், திருமா ஆர்ப்பாட்டம் People's Watch in Media Chennai

சுற்றுச்சூழலியல் ஆர்வலர் முகிலன், சென்ற வருடம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் 13 பேரை போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தி சுட்டு கொன்றது சம்பந்தமான ஆவன படமொன்றை சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் பிப்ரவரி 15ந் தேதி வெளியிட்டார்.   அன்று இரவிலிருந்து அவர் காணாமல் போனார். 105 நாட்கள் ஆகியும் முகிலன் இருப்பிடம் பற்றி எந்த முன்னேற்றத்தையும் போலீஸ் கண்டுபிடிக்கவில்லை. இந்த சூழலின் பின்னனியில் தான் ஏற்கனவே முகிலனை மீட்க கோரி பல போராட்டங்கள் நடத்திய காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் இன்று 1 ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அரசுக்கு எதிராக மாபெரும் ஆர்பாட்டம் நடத்தியது.  கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தலைமையில் பழ.நெடுமாறன், தி.மு.க. துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமிஜெகதீசன், மார்க்ஸ்சிஸ்ட் கே.பாலகிருஷ்ணன், சி.பி.ஐ. சி.மகேந்திரன், காங்கிரஸ் கோபன்னா,  ம.தி.மு.க. மல்லை சத்யா, வி.சி.க. திருமாவளவன், த.வா.க.வேல்முருகன் உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் இந்த ஆர்பாட்டத்தை நடத்தினர். என் கணவர் உயிருடன் இருக்கிறாரா? தமிழக அரசே பதில் சொல்  என்ற கேள்வியுடன் முகிலன் மனைவி பூங்கொடியும் இதில் கலந்து கொண்டார்.

#PeoplesWatch, #Mugilan, #WhereIsMugilan, #Protest, #Demonstration
2 Jun 2019 சமூக ஆர்வலர் முகிலனை மீட்கக்கோரி பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் ஆர்.நல்லக்கண்ணு தலைமையில் நடந்தது People's Watch in Media Madurai

சமூக ஆர்வலர் முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தலைமை தாங்கினார். தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்.நல்லக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:- இயற்கை வளங்களுக்காக போராட்டம் நடத்திய முகிலனை காணாமல் போனதாக போலீசாரிடம் தெரிவித்து 105 நாட்கள் ஆகியுள்ளது. இந்தநிலையில் போலீசாரும், அரசும் இதுவரை முகிலனை கண்டுபிடிக்கவில்லை. மேலும் முகிலன் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். முகிலனை கண்டுபிடிக்காவிட்டால் வருகின்ற 15-ந்தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம். மத்திய அரசு இந்தி திணிப்பு முயற்சியை மீண்டும் எடுக்கக் கூடாது. மாநில மொழியிலேயே கல்வியை தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முகிலனின் மனைவி பூங்கொடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க. சட்டத்துறை செயலாளர் ஆர்.கிரிராஜன், ம.தி.மு.க. துணை பொது செயலாளர் மல்லை சத்யா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், தமிழ் பேரரசு கட்சி தலைவர் வ.கவுதமன், நடிகர் பொன் வண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

#Mugilan, #Henri, #Tiphagne, #HenriTiphagne, #Demonstration, #WhereIsMugilan
2 Jun 2019 Mugilan Missing Case: Political Parties, Civil Rights Groups Demand Speedy Action People's Watch in Media Chennai

The environment activist had released a report and video on police highhandedness in Thoothukudi firing; CD-CID unable to trace him in spite of forming 17 special teams in Tamil Nadu. Political parties and civil rights organisations staged a...

#WhereIsMugilan, #HenriTiphagne, #MugilanMissing, #HRDMugilan, #Henri, #PeoplesWatch
2 Jun 2019 Mugilan’s family raises questions about CB-CID investigation People's Watch in Media Chennai

Ask why the probe agency did not interrogate police officials Rights activists have questioned why the CB-CID did not examine senior police officials, whose alleged complicity in the firing on anti-Sterlite protesters in Thoothukudi was exposed by Mugilan...

#Mugilan, #WhereIsMugilan, #PeoplesWatch, #HenriTiphagne


Join us for our cause