for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

மதுரை:மதுரை அவனியாபுரம் போலீஸ் விசாரணையில் ஒருவர் மரணமடைந்தது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரிய மனுவை தானாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 4 பேரை ஆஜர்படுத்த உத்தரவிட்டது.

............................................

பின் மனுதாரர் தரப்பில் வாபஸ் பெற்றதால், தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.இது தொடர்பாக உயர்நீதிமன்றக் கிளை பதிவாளருக்கு (நீதித்துறை) ஒரு கடிதம் வந்தது. அதில், 'சம்பந்தப்பட்ட போலீசாரின் மிரட்டலால் மனுதாரர் வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். வழக்கு விசாரணை சுதந்திரமாக நடக்க வாய்ப்பில்லை. தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் பதிவாளர், ''சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிய வேண்டும். அதை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்,'' என மனு செய்தார். இதை ஏற்கனவே தானாக முன்வந்து விசாரித்த நீதிபதிகள் அமர்வு அரசுத் தரப்பில் பதில் மனு செய்ய உத்தர விட்டது.மீண்டும் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது.

இவ்விவகாரத்தில் சிலருக்கு இடையே நடந்த உரையாடல் குறித்த ஆடியோ பதிவின் ரகசிய அறிக்கையை உயர்நீதிமன்றக் கிளை கூடுதல் பதிவாளர் ஜெனரல் தரப்பு தாக்கல் செய்தது. இதை படித்துப் பார்த்தபின் நீதிபதிகள் உத்தரவு: இவ்விவகாரம் தொடர்பாக கதிர், ஆதிநாராயணன், ரமேஷ், லோகநாதனை ஏப்.,17ல் ஆஜர்படுத்த மதுரை போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Full Media Report



Join us for our cause