People's Watch in Media
கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக, மக்கள் மீது துப்பாக்கி காட்ட கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது ஹைலைட்ஸ்: கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசில் இவ்வளவு ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க கூடாது கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக, மக்கள் மீது துப்பாக்கியை காட்ட கூடாது கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக...
சென்னை: கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து கூறியிருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அறிக்கையின் அடிப்படையில் வழக்கை முடித்துவைத்தது. இதனை எதிர்த்து மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். மனுவில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய மனித உரிமை ஆணையம் சீல் வைத்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாகவும், அவை வெளியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என ஆணையத்தில் தெரிவித்துள்ளதாக மனுதாரர் திபேன் தெரிவித்தார். மேலும் அறிக்கை வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, தேசிய மனித உரிமை ஆணைய அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு என குறிப்பிட்ட நீதிபதிகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக்கூடாது எனவும், கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கக்கூடாது எனவும் தெரிவித்தனர். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறக்கூடாது என்றும் குறிப்பிட்டனர். தொடர்ந்து இந்த வழக்கில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கையையும், புலன் விசாரணை பிரிவின் விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்திருக்கின்றனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு சென்னை உயர்நீதிமன்றம்
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.பலர் படுகாயமடைந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், மனித உரிமை ஆணைய புலனாய்வு பிரிவு அறிக்கையின் அடிப்படையில், வழக்கை முடித்து உத்தரவிட்டது.இதை எதிர்த்து, வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட கோரி மதுரையை சேர்ந்த ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.தேசிய மனித உரிமை ஆணைய அறிக்கையை நீதிபதிகள் ஆய்வு செய்தனர். துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை தமிழக தலைமை செயலாளருக்கும், டிஜிபிக்கும் தேசிய மனித உரிமை ஆணையம் வழங்கியுள்ளதாக நீதிபதிகள் சுட்டி காட்டினர்.இந்த அறிக்கை நகலை, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கும், மனுதாரருக்கும் வழங்க மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அறிக்கையை பொதுவெளியில் வெளியிடக் கூடாது என அறிவுறுத்தினர்.கடந்த 2018ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு எனக் கூறிய நீதிபதிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசில் இவ்வளவு ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க கூடாது என்றும், இதுபோல மீண்டும் ஒரு சம்பவம் நடக்க கூடாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.இந்த வழக்கில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையையும், ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவின் விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்ய தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்காக மக்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தக் கூடாது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 13 பேர் பரிதாமாக கொல்லப்பட்டனர். இந்நிலையில், இது தொடர்பாக விசாரித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், அந்த புகார்களை முடித்து வைத்ததை எதிர்த்து, ஹென்றி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை .தாக்கல் செய்தார். துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்றும், முறையான விசாரணையை நீதிமன்றம் என்றும் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், சீலிடப்பட்ட அறிக்கை ஒன்றை மணி உரிமைகள் ஆணையம், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையை, மத்திய அரசு, மாநில அரசு மற்றும் மனுதாரருக்கு நக்கலாய் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ள நிலையில், அந்த அறிக்கையை பொதுவெளியில் வெளியிட கூடாது என்றும் 3 தரப்பினருக்கும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக இழப்பீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் கருத்து கூறுகையில், ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்காக மக்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தக் கூடாது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு என்றும், இந்த வழக்கு விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் ஜன நாயகத்தின் மீது விழுந்த வடு
The Madras High Court on Monday issued a host of directions to the State government for the rehabilitation of the victims and their families of the 2018 incident of police firing that had followed the Sterlite Protests...
கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக, மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த கூடாது எனவும் இதுபோல மீண்டும் ஒரு சம்பவம் நடக்க கூடாது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு என்று சென்னை உயர்...
Without meaning disrespect, yes, the protest may not have been legal or legitimate, but citizens cannot be fired on the behalf of any corporate body," the Chief Justice added. The 2018 police firing on unarmed civilians...
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு, ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதற்கு எதிராக காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விதமும் பலியானோரின் புகைப்படங்களும்வெளியாகி நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. `இப்படியொரு துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்?'...