People's Watch in Media

மக்கள் கண்காணிப்பகம்- இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் ஆகியவை சார்பில் கண்ணகி, முருகேசன் சாதிய படுகொலை வழக்கின் தீர்ப்பினை முன் நகர்த்துவோம், சாதிய ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டத்தை உருவாக்க வலியுறுத்தி விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் பொது உரையாடல் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு வக்கீல் ஹென்றிதிபேன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. அமைப்பு செயலாளர் வந்தியத்தேவன், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. அப்துல்சமது, எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக், துரை.ரவிக்குமார் எம்.பி., சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க பேராசிரியர் கல்விமணி, இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மைய ரமேஷ்நாதன், சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் பூங்குழலி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆற்றலரசு, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முஸ்தாக்தீன் உள்ளிட்ட பலர் கருத்துரை வழங்கினர். கருத்தரங்கின் நிறைவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- சங்பரிவார் அமைப்புகள் ஊடுருவல் தலித் மக்களை மற்ற சமூகத்தினருக்கு எதிரானவர்களாக காட்டி அரசியல் ஆதாயம் பெற ஒரு கும்பல் செயல்பட்டு வருகிறது. தமிழக கிராமங்களில் சங்பரிவார் அமைப்புகள் ஊடுருவியுள்ளனர். கோவில்களுக்கு நன்கொடை கொடுப்பது, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு உதவி செய்வதுபோல் ஊடுருவி செயல்பட்டு வருகிறார்கள். பாம்பின் வாயில் தவளை சிக்கியிருப்பதைப்போல பா.ஜனதாவிடம் அ.தி.மு.க. சிக்கியுள்ளது. அ.தி.மு.க.வை அழிப்பதுதான் பா.ஜனதாவின் நோக்கம். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் சாதி ஆணவ படுகொலைகள் நடக்கவில்லை, சாதி மறுப்பு திருமணம், மத மறுப்பு திருமணம் செய்துகொள்பவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என சட்டமன்றத்தில் கூறியவர்தான் அப்போதைய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். தமிழகத்தில் சங்பரிவார் அமைப்புகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. தமிழகத்தில் சாதியின் பெயரால் மாணவர்கள், இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். இளைய தலைமுறையினர் நிலைமை என்னவாகும் என்ற கவலை எழுந்துள்ளது. ஆணவப்படுகொலைக்கு எதிராக சட்டம் தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தவிர்க்க முடியாத கட்சியாக வளர்ந்துள்ளது. திருமாவளவனை வீழ்த்தினால் தலித் மக்களை வீழ்த்திவிடலாம் என நினைக்கிறார்கள். ஆனால் ஒருபோதும் திருமாவளவனை வீழ்த்த முடியாது. தம்பி எனக்கூறி கையை பிடித்தபோது நம்பி கையை கொடுத்தேன், ஆனால் அதற்கு பின்னால் அவ்வளவு பெரிய படுகுழி இருக்கும் என நினைக்கவில்லை. சாதிய ஆணவப்படுகொலையை தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டத்தை இயற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்தியாவில், ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. கடந்த சில மாதங்களில் மட்டும் பல்லாயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. பாலிவுட், டோலிவுட் எனத் திரைப்படத்துறைக்குள் போதைப்பொருள் புழங்கும் செய்திகளும் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக, மும்பை சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக்கூறி பாலிவுட் ...

Court sets January 2022 as deadline for CB-CID The Madurai Bench of the Madras High Court on Monday directed the CB-CID to expedite the probe in Avaniapuram custodial death case. A Division Bench of Chief Justice Sanjib...

HC: Complete custodial death case prob by Jan Oct 26, 2021, 04:06 IST Madurai: The Madras high court on Monday asked the CB-CID to take steps to complete the investigation into the Avaniyapuram...

The Madurai Bench of Madras High Court on Monday directed the CB-CID to complete the investigation in Avaniyapuram custodial death case by the end of January 2022. MADURAI: The Madurai Bench of Madras High Court on Monday directed...

The October 21 directive warns of action against private organisations if they use the words ‘human rights’ in their name or display them on vehicles. Tamil Nadu DGP C Sylendra Babu has drawn the ire of human rights...

கடந்த அக்டோபர் 11 அன்று ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஸ்ரீபெரும்புதூர் அருகே காவல் துறையினருடனான மோதலில் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு நடந்திருக்கும் முதலாவது மோதல் சாவு இது. மதுரையை மையமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் செயல்பாட்டு அமைப்பான மக்கள் கண்காணிப்பகத்தின் கள ஆய்வில், இது போலி ...

They urge State Human Rights Commission to intervene and hold inquiry Human rights organisations based in Madurai — People’s Watch and Joint Action Against Custodial Torture (JAACT) — have condemned the recent police ‘encounter’ killings in Tamil Nadu....

Encounter: Search on for two aides of history-sheeter Oct 17, 2021, 04.40 AM IST Tuticorin: More than 30 hours after the killing of history sheeter S Duraimurugan near Muthaiahpuram in rural Tuticorin on Friday, the police were...

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள கூட்டாம்புளி, காமராஜ் நகரைச் சேர்ந்தவர் துரைமுருகன். ஆரம்பத்தில் சின்னச் சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு வந்தவர் படிப்படியாக வளர்ந்து ரவுடியாக மாறியிருக்கிறார். இவருக்கென தனியாக கேங்க் எதுவும் கிடையாது. அவ்வப்போது ஆட்களைச் சேர்த்துக்கொள்வார். ஒரு சம்பவத்துக்கு உடன் சேர்ப்பவரை அடுத்த சம்பவத்துக்கு ஈடுபடுத்தாதது இவரது வழக்கம். கடந்த 2001-ல் முத்தையாபுரத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நெருங்கிய உறவினரான சீனி என்ற சீனிவாசகத்தை கொலை செய்ததன் காரணமாக ரவுடிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டார். ............................ இதுகுறித்து மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குனர் வழக்கறிஞர் ஹென்றி திபேனிடம் பேசினோம், “தமிழகத்தில் ஒரு ஆட்கொல்லிப் புலியைப் பிடிப்பதற்குகூட, 20 நாட்கள் அவகாசம் எடுத்து அந்தப் புலியை உயிருடன் பிடித்திருக்கிறது வனத்துறை. ஆனால், ஸ்ரீபெரும்புதூரிலும், தூத்துக்குடியிலும் குற்றவாளியை ஒன்றன்பின் ஒன்றாக சுட்டுக்கொலை செய்திருக்கிறது காவல்துறை. சுடப்பட்ட துரைமுருகன்மீது பல வழக்குகள் இருக்கின்றன. அவர் குற்றவாளி என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ’எச்சரிக்கை விடுத்தோம். அதையும் மீறி எங்களை அரிவாளால் தாக்கினார் அதனால் தற்காப்புக்காகச் சுட்டோம்’ என்கின்றனர் போலீஸார்.