for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

31 Jan 2022 சிபிஐ லட்சணம் தெரியாதா|இது முழுக்க அரசியல்|லாவண்யா மரணம் வழக்கு People's Watch in Media Madurai

லாவண்யா மரணம் வழக்கு - சிபிஐ மற்றும் NCPCR விசாரணை குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் அறக்கலகம் YouTube சேனலுக்கு பேட்டி

#LavanyaDeathCase, #NCPCR, #ArakalagamTV, #CBIEnquiry, #HenriTiphagne
27 Jan 2022 கருத்தரிப்பு சிகிச்சைக்கு பரோல் வழங்க மறுப்பு கைதி மனைவி கோரிக்கை நிராகரிப்பு People's Watch in Media Madurai

புதிய தலைமுறை தொலைகாட்சி News360 நிகழ்ச்சியில் கருத்தரிப்பு சிகிச்சைக்கு பரோல் வழங்க மறுப்பு குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன்

##PuthiyaThalaimurai, #HenriTiphagne, #Media
26 Jan 2022 இன்னும் பேசமுடியாத வழக்குகள் நிறைய இருக்கு! ஹென்றி டிபேன் பளீச் பேட்டி People's Watch in Media Madurai

தமிழகத்தில் சமீபத்தில் காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்கள் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறித்து நடைபெற்ற விவாதத்தில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் - Behindhoods Air

#PoliceTorture, ##CustodialDeath, ##CustodialTorture, #BehindwoodsAir, #Behindwoods
24 Jan 2022 முதல்வர் மூச்சுவிடாதது ஏன்? People's Watch in Media Chennai

முதல்வர் மூச்சுவிடாதது ஏன்? மதுரையில் உள்ள மக்கள் கண்காணிப்பகம் (பீப்பிள்ஸ் வாட்ச்) அலுவலகத்தில் விசாரணை நடத்திய சிபிஐ, அந்த அமைப்பின் இயக்குநர் ஹென்றி டிஃபேன் உள்ளிட்டோர் மீது கூட்டுச்சதி மற்றும் வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவும் செய்திருக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், புதிய கல்விக்கொள்கை, பீமா கோரேகான் சதி வழக்கு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவைக்கு எதிராக ’பீப்பிள்ஸ் வாட்ச்’ தீவிரமாக களத்தில் நின்றதுதான் இதன் பின்னணி என்கிறார்கள். இதைக் கண்டித்து திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்வினையாற்றி இருக்கும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினும் இதைக் கண்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்களாம். கனிமொழி மூலமாகவும் முதல்வருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாம். ஆனால், இந்த விவகாரத்தில் மூச்சுவிடவில்லை முதல்வர். எதிர்க்கட்சியாக இருந்தால் எதை வேண்டுமானாலும் பேசிவிட்டுப் போகலாம், ஆளும் கட்சியாக இருந்தால் அளந்துதான் பேசவேண்டும் என அவருக்குத் தெரியாதா என்ன!

#Kamadhenu, #CBI, #FCRA, #CPSC, #PeoplesWatch
22 Jan 2022 மக்கள் கண்காணிப்பகத்தில் சோதனை! திரைமறைவுப் பின்னணி! People's Watch in Media Chennai

முதலாளித்துவ சனநாயக நாட்டில் அரசதிகாரத்தின் மீறல்களைச் சுட்டிக் காட்டித் தட்டிக் கேட்போர் மீது பழிவாங்கல் நடவடிக்கை பாய்வதென்பது புதிதல்ல. வாடிக்கையான ஒன்றே! இந்த வரிசையில் இப்போது மக்கள் கண்காணிப்பகம் மீது ஒன்றிய அரசதிகாரம் பாய்ந்துள்ளது. மனித உரிமைத் தளத்தில் கால் நூற்றாண்டுக்கு மேலாக இந்திய அரசமைப்பினுடைய சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டு களப்பணியாற்றி வரும் மக்கள் கண்காணிப்பகம் அலுவலகத்தில் கடந்த 8.1.2022 அன்று மத்திய புலனாய்வுத் துறையினர்(CBI) எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நடுநிலையுடன் செயற்படவேண்டிய ஊடகங்கள் ஒருதலைப் பட்சமாய் முதல் தகவல் அறிக்கையில் உள்ளபடி சேதி வெளியிட்டன. இது மக்கள் கண்காணிப்பகத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக உள்ளது. எனவே உண்மையை உலகறிய உரக்கச் சொல்ல வேண்டியது காலத்தின் அவசியம். .................................  

#Minnambalam, #CPSC, #CBI, #FCRA, #PeoplesWatch
19 Jan 2022 10 லட்ச ரூபாய் கொடுத்தால் போதுமா? - நாமக்கல் மாற்றுத்திறனாளி பிரபாகரன் மரணம் | அறக்கலகம் டிவிக்கு திரு. ஹென்றி திபேன் அவர்களின் பேட்டி People's Watch in Media Madurai

10 லட்ச ரூபாய் கொடுத்தால் போதுமா? - நாமக்கல் மாற்றுத்திறனாளி பிரபாகரன் மரணம் - அறக்கலகம் டிவிக்கு திரு. ஹென்றி திபேன் அவர்களின் பேட்டி

#CustodialDeath, #Namakkal, #Torture, #PWD, #Prabakaran, #PersonswithDisability, #ArakalagamTV, #ArakalagamYouTube
17 Jan 2022 மனித உரிமை செயல்பாட்டுக்கு திமுக துணை நிற்கனும் People's Watch in Media Madurai

மக்கள் கண்காணிப்பகத்தில் CBI Raid குறித்து ஹென்றி திபேன் அவர்கள் ARAKALAGAM Youtube சேனலுக்கு அளித்த பேட்டி Video Courtesy: Arakalagam TV

#CBI, #CPSC, #PeoplesWatch, #ArakalagamTV, #ArakalagamYouTube
13 Jan 2022 மனித உரிமைக் காப்பாளர்கள் மீதான ஒன்றிய அரசின் ஒடுக்குமுறை People's Watch in Media Chennai

கடந்த 08.01.2022 சனிக்கிழமை அன்று காலை சுமார் 10.02 மணியளவில் சென்னை சிபிஐ (பொருளாதார குற்றப்பிரிவு) டிஎஸ்பி தலைமையில் பத்து அதிகாரிகள் மக்கள் கண்காணிப்பகம் அலுவலகத்தை சோதனையிட்டனர். மதுரை முதன்மை குற்றவியல் நடுவர் (Chief Judicial Magistrate) நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட 07.01.2022 தேதியிட்ட “சோதனையிடல் உத்தரவை” (Search Warrant) காண்பித்தனர். அதனடிப்படையில் 2008 முதல் 2012 வரையிலான மக்கள் கண்காணிப்பகத்தின் வெளிநாட்டு நிதி வங்கிக் கணக்குகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பார்வையிட்டனர். (06.01.2022 அன்று சிபிஐ மக்கள் கண்காணிப்பகத்தின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறது என்பது பின்னர் தெரிய வந்தது.) முதல் தகவல் அறிக்கையில் 2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரை பெறப்பட்ட நிதி, பரிவர்த்தனைகள் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 120 (B), 420, மற்றும் FCRA சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ......................................

#Keetru, #CBI, #CPSC, #PeoplesWatch, #HenriTiphagne


Join us for our cause