People's Watch in Media
After nearly 10 days of Vignesh's alleged custodial death, the key eyewitness in the case and the deceased's family gave details about the case and demanded justice. The deceased's counsel too raised a few questions and demanded...
A joint action committee against custodial torture comprising advocates and social workers on Saturday released a fact-finding report on the custodial of death of Vignesh, 25, in a city police station recently and said that it was a clear...
காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் வாக்குமூலங்கள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. சென்னையில் சமீபத்தில் நிகழ்ந்த விக்னேஷ் என்ற இளைஞரின் லாக்அப் மரணம் தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள் ஆகியோரின் வாக்குமூலங்களைக் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சென்னையில் இன்று வெளியிட்டது. வழக்கறிஞர்கள் சுதா ராமலிங்கம், ஹென்றி திபேன், அஜிதா, மில்டன் ஆகியோர் விக்னேஷின் உடன்பிறந்த சகோதரர்கள், சம்பவ சாட்சிகளுடன் வாக்குமூலங்களை வெளியிட்டனர்.
Vignesh Issue- Police Bargain Money - Vignesh's family shows Evidence?| Lockup Death| Henri Tiphagne Video Courtesy: S TV
Chennai (Tamil Nadu) [India], April 30 (ANI): Almost a week after 25-year old V Vignesh allegedly died in police custody at a police station in Tamil Nadu's Chennai, his brother on Saturday accused the police of offering a bribe...
காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் வலியுறுத்தல் ...
சென்னையில் போலீஸ் காவலில் விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ், மத்தியக் குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையை நடத்த வேண்டுமென்றும் சம்பந்தப்பட்ட காவலர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டுமென்றும் மனித உரிமை அமைப்புகள் கோரியுள்ளன. இந்த சம்பவத்தில் காவல்துறை நடந்துகொண்ட விதம் குறித்த பதற வைக்கும் வாக்குமூலங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் மிகத் தீவிரமான மனித உரிமை மீறல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டமைப்பு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து, விக்னேஷின் உறவினர்கள், இந்த நிகழ்வோடு சம்பந்தப்பட்டவர்கள் அளித்த வாக்கு மூலங்களை வெளியிட்டது. இதில் பல வாக்குமூலங்கள் பதறவைக்கும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. எடுத்துக்காட்டாக, கெல்லீஸ் சிக்னல் அருகே ஆட்டோவை சோதித்த போலீசார் அதில் பயணித்த சுரேஷ் மற்றும் விக்னேஷை அங்கேயே சவுக்கு கட்டையால் அடித்ததாக ஒரு ஆட்டோ டிரைவர் அளித்த வாக்கு மூலம் சொல்கிறது. நடக்க முடியாத அளவுக்கு அடித்த பிறகும் அவருக்கு காவல் நிலையத்தில் சித்ரவதை தொடர்ந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சென்னையில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் குறித்து புகார் கொடுக்காமல் இருக்க காவல்துறை தரப்பில் தங்கள் குடும்பத்துக்கு ரூ. ஒரு லட்சம் லஞ்சம் கொடுப்பதாக மிரட்டியதாக பலியான விக்னேசின் சகோதரர் பரபரப்புக் குற்றச்சாட்டைக் கூறியிருக்கிறார். விசாரணை கைதி விக்னேஷ் மரணமடைந்த வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அவரது சகோதரர் வினோத் உடற்கூராய்வுக்குப் பிறகும் கூட விக்னேசின் உடலைப் பார்க்க குடும்பத்தினரை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவத்தில் புகார் கொடுக்காமல் இருக்க எனக்கு ரூ ஒரு லட்சம் தருவதாக காவலர்கள் கூறினார்கள். எனது சகோதரர் உடல் முழுவதும் காயங்கள் இருந்தது. உடற்கூராய்வுக்குப்பின் உடலைப் பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை என்று கூறுகிறார் விக்னேசின் சகோதரர் வினோத். அது மட்டுமல்லாமல் எங்கள் வீட்டின் உரிமையாளரிடம் காவலர்கள் மிரட்டி உடனடியாக எங்களை வீட்டை காலி செய்யச் சொல்லுமாறும் கூறியுள்ளனர் என்றும் வினோத் குற்றம் சாட்டியுள்ளார்.
He also countered the police's claims that his brother had died of 'fits', asserting that he never suffered from the problem throughout his life. In a key development in the Chennai custodial death case, the family of the victim...
The committee demands arrest of police personnel responsible for the man’s death A joint action committee against custodial torture comprising advocates and social workers on Saturday released a fact-finding report on the custodial of death of Vignesh, 25,...