People's Watch in Media



.................................... இதில் காவலர்களை மட்டும் குற்றம் சொல்லி பயனில்லை; மேலதிகாரிகளையும் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்கிறார் மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திஃபேன். "இந்த மரணத்தைப் பொறுத்தவரை, பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை. அதற்காக காத்திருக்கிறோம். ஆனால், இறந்தவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். ஆகவே, எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்ய வேண்டும்" என்கிறார் அவர். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் காவல் நிலைய மரணங்கள் அதிகரித்திருக்கிறதா என்று கேட்டபோது, "இந்த அரசை ஒரு கவனக் குறைவான அரசு என்று சொல்ல மாட்டேன். ஆனால், விக்னேஷ் வழக்கு போன்ற சில தருணங்களில் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம். வேறு தலையீடுகள் இருக்கலாம். ஆனால், தற்போதைய வழக்கில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கைதி இறந்த அன்றே சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். பல வழக்குகளில் நாங்கள் இதற்காக 3 வருடமெல்லாம் வழக்கு நடத்தியிருக்கிறோம். அதேபோல, சம்பவம் நடந்த அன்றே இடைநீக்கம் செய்திருக்கிறார்கள். அதுவும் ஆய்வாளரே இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்" என்கிறார் ஹென்றி. ...........................................

.................................... அதேபோல் கொடுங்கையூர் காவல் நிலையம் மற்றும் அதன் புறக்காவல் நிலையம் ஆகியவற்றில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்றும் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு கோரியுள்ளது. அதேபோல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை வழக்கை தாமாக முன் வந்து சென்னை உயர்நீதிமன்றம் அதன் விசாரணையை கண்காணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.அதேபோல் லாக் அப் மரணங்கள் இனி நடக்காமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .....................................


The custodial death of a Dalit youth in Chennai again sparks outrage and highlights the urgent need to humanise the police force. On the night of April 18, a team of Chennai policemen, carrying out a routine vehicle...

ஆட்சிகள் மாறினாலும் காவல்துறை அத்துமீறல்கள், காவல் நிலைய மரணங்கள், போலி மோதல் மரணங்கள் எனத் தொடர்ந்து கொண்டிருப்பதாகக் கூறும் மதுரை மக்கள் கண்காணிப்பகம், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இவ்வாண்டு ஏப்ரல் வரை 10 காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 07-01-2021-ல் சென்னை எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் சூர்யா, 03-4-21-ல் சேலம் ஆத்தூர் காவல் நிலையத்தில் ராஜாமணி, 07-07-21 கோயம்புத்தூர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் இந்திர பிரசாத், 24-08-21-ல் தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் சத்தியவாணன், 04-09-21-ல் நாமக்கல் பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் மணிகண்டன், 12-12-21-ல் இராமநாதபுரம் கீழத்தூவல் காவல் நிலையத்தில் மணிகண்டன், 13-01-22 நாமக்கல் கிளைச்சிறையில் பிரபாகரன், 05-02-22 திருநெல்வேலி ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் சுலைமான், 14-02-22 திருநெல்வேலி தாலுகா காவல் நிலையத்தில் தடிவீரன், 18-04-22 சென்னை தலைமைச்செயலகக் குடியிருப்பு காவல் நிலையத்தில் விக்னேஷ் என 10 காவல் நிலைய மரணங்களைத் தெரிவித்துள்ளனர். `ஜெய் பீம்' படத்தைப் பார்த்து வருத்தப்பட்டு மிசா காலத்தில் தான் பாதிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து பதிவு செய்த முதலமைச்சர், அவர் கட்டுப்பாட்டில் இருக்கும் துறையில் இதுபோன்ற காவல் நிலைய மரணங்கள் நிகழாமல் இருக்கவும், அப்பாவிகள் காவல்துறையினரால் பாதிக்கப்படாத வகையில் சீர்திருத்தத்தைக் கொண்டு வரவும் வேண்டும் என்பதே சமூகச் செயற்பாட்டாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தமிழ்நாட்டில் ஆளும் திமுக ஆட்சியில் ஏற்படும் காவல் நிலைய மரணங்கள் மீது உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளத் தவறி விட்டதாக மனித உரிமை செயல்பாட்டாளர்கள் குற்றம்சுமத்துகின்றனர். 'புதிய அரசு பொறுப்பேற்றவுடன் காவல்நிலைய மரணங்கள் தொடர்பாக மூன்று தீர்ப்புகள் அடங்கிய புத்தகங்களைக் கொடுத்தோம். அதன்படி, இந்த அரசு செயல்பட்டிருந்தால் காவல் மரணங்கள் தொடர்ந்திருக்க வாய்ப்பில்லை' எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ................................................................................................................................................................................................................................................................... இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்தாலும், காவல்நிலைய மரணங்களின் மீது அரசு அலட்சியம் காட்டுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, ''விக்னேஷ் மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனை அறிக்கையை கடுமையாகப் போராடித்தான் பெற்றோம்'' என்கிறார், மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் செயல் இயக்குநரும் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஹென்றி திபேன். '' விக்னேஷ் வழக்கில் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடந்தது. கடந்த மே 3 ஆம் தேதிதான் அதன் அறிக்கை கிடைத்தது. அத்தனை நாள்கள் வரையில் அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் காட்டாமலேயே வைத்திருந்தது. மேலும், 'சட்டபூர்வ உரிமை உள்ளவர்களிடம்தான் கொடுக்க முடியும்' என்றனர். நாங்களும் சட்டப்பூர்வ உரிமை உள்ள ஒருவரைக் கூட்டிச் சென்றோம். அதன்பிறகு அதற்கான சான்று வாங்கி வரச் சொன்னார்கள். அவர்களிடம் ஆதார், பான் கார்டு, ரேசன் அட்டை என எதுவுமே இல்லை. இதன்பிறகு கடும் போராட்டத்துக்குப் பிறகு மே 3 ஆம் தேதி பிரேதப் பரிசோதனை அறிக்கையை கொடுத்தனர். முன்னரே அது வெளிவந்திருந்தால் 26 ஆம் தேதி சட்டசபையில் முதல்வர் உண்மையைப் பேசியிருப்பார். இதற்கிடையில் விக்னேஷ் மரணத்துக்கு வலிப்பு நோய் காரணம் என அவருக்கு யார் அறிக்கை கொடுத்தது?'' என கேள்வி எழுப்புகிறார், ஹென்றி திபேன். .........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓராண்டை நிறைவுச் செய்துள்ளது. இந்த ஓராண்டில் சட்டம் - ஒழுங்கைக் காப்பதில் அரசின் செயல்பாடுகள் எப்படி? நிறை, குறைகள் என்னென்ன? இனி செய்ய வேண்டியவை என்னென்ன? - இது குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார் காவல் சித்ரவதைகளுக்கு எதிரான கூட்டியக்கத்தின் (JA ACT) ஆலோசகரும், வழக்கறிஞருமான ஹென்றி திபேன். " 'ஜெய்பீம்' திரைப்படம் பார்த்துவிட்டு, கண்ணீர் வடித்ததாக கூறிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த சமூகத்தில் தொடர்ந்து காவல்துறையினரின் சித்ரவதைகளுக்கு ஆளாகி வரும் குறவர், இருளர் சமூகங்களுக்கு எதிரான அநீதிகளின்போது நடவடிக்கை எடுக்காதது ஏன்? முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்ற நாட்களிலிருந்து கல்வித் துறை, பேருந்துகளில் மகளிருக்கு இலவசம், விவசாயம், நீர்வளத்துறை, சோலார் எனர்ஜி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய முயற்சிகளையும், திட்டங்களையும் மேற்கொண்டார். அதேவேளையில், முதல்வர் தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையில் அதுபோன்ற மாற்றங்களைக் கொண்டு வராதது ஏன்? இப்படி பல்வேறு கேள்விகள் எழுகின்றன. காவல்துறையில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டாலும் கூட, ஏற்கெனவே காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை மிகச் சரியாக பின்பற்றவாவது உத்தரவிட்டிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.