மக்கள் கண்காணிப்பகம் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
மதுரை சொக்கிகுளம் பெசன்ட் சாலை பகுதியில் உள்ள மக்கள் கண்காணிப்பகம் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
மனித உரிமைகள் அமைப்பின் அலுவலகமான இந்த மக்கள் கண்காணிப்பு அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஞாயிற்றுக்கிழமை மின்னஞ்சல் வந்தது.
